PUBLISHED ON : ஏப் 01, 2011

1. பனிகாலத்தை தூக்கத்திலேயே செலவழிக்கும் விலங்குகளுக்கு உடலில் சக்தி குறைவாகவே செலவாகிறது.
சரி: கரடி போன்ற சில விலங்குகள் குளிர் காலம் முழுவதையும் தூக்கத்திலேயே செலவிடும். எனவே, தூக்கத்தில் உடல் ஓய்வாக இருப்பதால் மெதுவாக சுவாசிக்கும். உடல் வெப்பநிலையும் குறைவாக இருக்கும். எனவே குளிர்காலத்தில் உயிர் வாழ அதற்கு குறைந்த அளவு சக்தி போதும். கார் காலத்தில் அதிகம் சாப்பிட்டு உடலில் சேர்ந்த கொழுப்பு குளிர்காலத்தில் குறைந்துவிடும்.
2. ஒரு கம்ப்யூட்டர் கீ-போர்டில் உள்ள நுண் கிருமிகள், 'டாய்லெட்' மூடியிலுள்ள நுண் கிருமிகளை விட அதிகம்.
சரி: அரிசோனா பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் 'டாய்லெட்' மூடியிலுள்ள கிருமிகளை விட அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் அதிகம் கிருமிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு கம்ப்யூட்டர் கீ-போர்டில் ஒரு சதுர அங்குலத்தில் மூவாயிரத்து 295 நுண் கிருமிகளும், ஒரு சதுர அங்குல கம்ப்யூட்டர் மவுஸில் ஆயிரத்தி 676 நுண் கிருமிகளும் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொலைப்பேசியில் ஒரு சதுர அங்குலத்தில் 25 ஆயிரத்து 127 நுண் கிருமிகள் இருப்பதாக ஆய்வுகள் கண்டுப் பிடித்துள்ளனர். சாதாரணமாக ஒரு 'டாய்லெட்' மூடியில் ஒரு சதுர அங்குலத்தில் 49 நூண் கிருமிகள் இருப்பதாக கண்டுப்பிடித்துள்ளனர்.
