தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சேவல் ஜானகி!

சேவல் ஜானகி!

சேவல் ஜானகி!


PUBLISHED ON : ஜூன் 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர் அருகே, சூளகிரி உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!

இருபாலரும் படிக்கும் பள்ளி அது. ஒரு நாள், இரண்டாவது பாடவேளை துவங்கியது. ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, சரித்திர பாடம் நடத்த எத்தனித்தார். அப்போது, எனக்குப் பின்னால், சேவல் கூவியது. ஆசிரியரும், நாங்களும் ஆச்சரியமுடன் திரும்பி பார்த்தோம். மாணவி ஜானகி, குனிந்து, அரிசி குருணையை ஒரு சேவலுக்கு போட்டு விட்டு, எழுந்து நின்றாள்.

'என்னம்மா இது...' என்று ஆசிரியர் கேட்டார். அப்போது, ஜானகி, 'என்னிடம் கணக்கு புத்தகம் இல்லை. அதனால் கணக்கு ஆசிரியர் நேற்று கடிந்தார். என் பெற்றோரிடம் சொன்னேன். சேவலை கடையில் விற்று, அந்த பணத்தில், புத்தகம் வாங்கச் சொன்னார் என் அப்பா.காலையில், கடை திறக்கவில்லை. அதனால் பள்ளிக்கு சேவலோடு வந்து விட்டேன்...' என்றாள்.

இதைக் கேட்டு மனம் இரங்கிய ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, 'சேவலை விற்க வேண்டாம்; வீட்டிற்கு கொண்டு போய் விடு; புத்தகம், நோட்டை நான் வாங்கித்தருகிறேன்...' என்றார்.

மறு நாள், முதல் பாடவேளை ஆரம்பிக்கும் முன்பே, ஜானகியின் பையில் அனைத்து புத்தகங்களும், நோட்டுக்களும், புத்தம் புதிதாய் இருந்தன.

மூன்றாவது பாடவேளையில், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வந்தார்; பென்சில், பேனா, ஸ்கேல் பாக்கெட்டுகள் கையில் கொண்டுவந்தார். 'யாருக்கு எது தேவையோ எடுத்துக் கொள்ளுங்கள்... எது வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்! வீட்டிலுள்ள பொருட்களை விற்காதீர்...' என்றார்.

அவரது அன்பான வார்த்தைகள் நினைவில் இன்றும் நிற்கிறது. இப்போது என் வயது, 63. அவரது நெடிய தோற்றமும், அன்புள்ளமும் சிகரமாய் என் மனதில் பதிந்துள்ளது!

- பா.பாண்டிலட்சுமி, திருவள்ளூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us