PUBLISHED ON : ஜூலை 27, 2018

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்!
பன்னீர் ரோஜா - 2
பால் - 2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை - 1 தேக்கரண்டி
கற்கண்டு - 5 தேக்கரண்டி
செய்முறை:
ரோஜா இதழ்களை, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், நெய் விட்டு, திராட்சையை வறுக்கவும். அதனுடன், ரோஜா இதழ்களை போட்டு, சிறிது நீர், கற்கண்டு சேர்த்து, கரைந்ததும் பால் சேர்த்து நன்றாக சூடாக்கவும். சுவையான
ரோஜா கீர் தயார்.
இதை அருந்தினால், மலச்சிக்கல் போகும்; ரத்தம் சுத்தமாகும்; குடல்பூச்சிகளை வெளியேறும்.
சிறுவர், சிறுமியர் விரும்புவர்!
- ம.ராஜலட்சுமி, கோவை.
