PUBLISHED ON : ஜூலை 27, 2018

அ நிறம் | அளவு
நான், 35 ஆண்டுகள் ஆசிரியையாகவும், பின், தலைமை ஆசிரியையாகவும் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவள். சிறுவர்மலர் படிப்பதில் விருப்பம் அதிகம். பெயர் தான் சிறுவர்மலரே தவிர, அதில் பெரியவர்களுக்கும், நிறைய தகவல்கள் உள்ளன.
நான் மட்டுமல்ல, என் குழந்தைகளையும், என் பள்ளிக் குழந்தைகளையும் சிறுவர்மலர் படிக்க ஊக்குவிப்பேன். 'அதிமேதாவி அங்குராசு' போன்ற பக்கங்கள் பயனுள்ள தகவல் அடங்கியவை.
இப்போது, ஐதராபாத்தில் வசித்தாலும், சென்னை வரும் போதெல்லாம், கண்டிப்பாக, 'தினமலர்' நாளிதழ் வாங்கி, சிறுவர்மலர் படிக்காமல் இருக்க மாட்டேன்.
எனக்கு இப்போது வயது, 72; ஆனாலும், சிறுவர்மலர் வாசகி தான். திறன் உள்ளவரை, சிறுவர்மலரை படித்தபடியே இருப்பேன்.
- வீ.மரகதம், சென்னை.
