தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (123)

இளஸ்... மனஸ்... (123)

இளஸ்... மனஸ்... (123)


PUBLISHED ON : ஜூலை 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, கல்லூரி மாணவி எழுதிக் கொண்டது. சிறுவயதில் இருந்தே சிறுவர் மலர் வாசகி... இந்தப் பகுதியின் மூலம், பல அறிவுரைகளைப் பெற்று வருகிறேன். என்னோட பிரச்னைக்கும், நல்ல பதில் சொல்வீர்கள் என நம்புகிறேன்.

என் முகத்தில், தாடி, மீசை போன்று, நிறைய முடி வளருது ஆன்டி. உடல் முழுவதும், நிறைய முடிகள் இருப்பதால், நான் படும் அவஸ்தையும், அவமானமும் கொஞ்சம் நஞ்சம் அல்ல...

வாக்ஸிங், ஷேவிங், த்ரெட்டிங் என, எவ்வளவோ பண்ணி விட்டேன். மருத்துவரிடம் காட்டினால், 'ஹார்மோன் சுரத்தல் அதிகமாக உள்ளதால் இப்படி வளருது. பார்லர் போய், முடியை நீக்கு...' என்கிறார். எத்தனை முறை பார்லர் செல்வது...

நாளாவது நாளே முடி வளர்ந்து விடுகிறது... இதற்கு நிரந்தர தீர்வு ஏதேனும் சொல்லுங்க... 'லேசர் ட்ரீட் மென்ட்' மூலம், நிரந்தரமாக முடியை அகற்றலாமா... பக்க விளைவுகள் ஏதேனும் வருமா... இல்ல... இயற்கை முறையில் வழிகள் இருந்தாலும் சொல்லுங்க ஆன்டி.

இந்தப் பிரச்னை, ஒரு பெண்ணுக்கு எத்தனை மன உளைச்சலை தரும் என்பது, உங்களுக்குத் தான் புரியும் ஆன்டி, ப்ளீஸ்... என்ன காப்பாத்துங்க...

அன்பு மகளே.... உன்னோட கஷ்டத்தை என்னால் புரிந்துக் கொள்ள முடியுது. கவலைப்படாதே... எல்லா பிரச்னைகளுக்குமே ஒரு முடிவு உண்டு. நான் சொல்லும் வழிமுறைகளைத் தொடர்ந்து செய்து வந்தால், உனக்கு பலன் கிடைக்கும். பாதியிலேயே விட்டு விட்டால் நான் பொறுப்பல்ல...

ஒரு சிலருக்கு, உடலில், 'ஹார்மோன் சேஞ்சஸ்' ஏற்படும் போது, இப்படி நிறைய முடி வளரும். பீரியட்ஸ் ரெகுலரா வராதவர்களுக்கும், முடி வளர்ச்சி அதிகமா இருக்கும். சிலர், நிறைய மாத்திரைகள் சாப்பிடும் போது, சில மாத்திரைகள் மூலம் இவ்வாறு, அதிகப்படியான முடி வளர்ச்சி ஏற்படும்; முடி வளர்ச்சியை தடுக்க, இந்த வழிமுறைகளைப் பின்பற்று.

* கொஞ்சம், பாசிப் பயிறு, மஞ்சள் துாள் சிறிது, தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து, 'பேஸ்ட்' போல் முடி உள்ள இடங்களில் பூசி, 20 நிமிடத்திற்குப் பின் கழுவி விடு. இம்முறையை, வாரத்திற்கு மூன்று முறை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்; தோலும் பள பளக்கும்.

* பால் அல்லது பால் ஏட்டில் சிறிது மஞ்சள் தூள் கலந்து, இரவில், முடி உள்ள இடங்களில் பூசி, பழைய நைட்டி அணிந்து படுத்துக் கொள். காலையில், வழக்கம் போல் குளித்து விடு. இப்படி, ஆறு மாதத்திற்கு செய்து வந்தால், சுத்தமாக முடி வளர்வது நின்று விடும்.

* ஒரு பாத்திரத்தில், 1 கப் தண்ணீரில், அரை கப் சர்க்கரை சேர்த்து, கொதிக்க வைத்து, திக்காக வந்தததும் இறக்கி, ஆறியதும், சிறிது மஞ்சள் தூள், 1 ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து, 'திக் பேஸ்ட்' போல், முடி உள்ள இடங்களில் திக்காக தடவி, ஒரு மணி நேரம் ஊற விடவும். பின், வெந்நீரில், ஒரு துணியை நனைத்து துடைக்கவும்; இப்படி, வாரம், மூன்று முறை செய்து வர வேண்டும்.

* பச்சை பப்பாளியின் தோலை எடுத்து விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, மிக்சியில் அரைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடத்திற்குப் பின் கழுவி வர, நல்ல பலன் கிடைக்கும். பப்பாளியில் முடி வளர்ச்சியை தடுக்கும், 'பப்பயின் என்சைம்' உள்ளது; எனவே, இதுவும் நல்ல பயன் தரும்.

'லேசர் ட்ரீட்மென்ட்' மூலம் நிரந்தரமாக முடியை நீக்கும் முறை, சென்னையில் உள்ள, பிரபல மருத்துவமனைகளில், செய்கின்றனர். ஒரு மணிநேரம் ஆகும்.

நான்கு - ஆறு சிட்டிங் நடைபெறும். கருப்பு முடி உள்ளவர்களுக்கு தான், 'லேசர் டீரிட்மென்ட்' செய்ய முடியும். பிரவுன், வெள்ளை நிற முடி உள்ளவர்களுக்கு செய்ய முடியாது. உனக்கு விருப்பமானால், காஸ்மெட்டிக் சர்ஜன்களை கலந்தாலோசித்து செய்துக் கொள்; நல்ல சர்ஜன்கள் எனில் பயப்படத் தேவையில்லை.

உன் முடி பிரச்னை நீங்கி, முகமும், உடலும் அழகு பெற வாழ்த்துகள்!

அன்புடன், ஜெனிபர் பிரேம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us