தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உப்புத்தண்ணீர், ஈர நிலம்!

உப்புத்தண்ணீர், ஈர நிலம்!

உப்புத்தண்ணீர், ஈர நிலம்!


PUBLISHED ON : மார் 25, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இது போன்ற உப்பு தண்ணீர் உள்ள ஈர நிலப்பகுதி கரையோரம் அமையும். அதுவும் குறிப்பாக நதியின் முகத்துவாரத்தில் அமையும். ஆயினும், உப்பு ஏரியுடன் சம்பந்தப்பட்ட நிலப்பகுதி நிறைந்து இருக்கும் பகுதியில் வெகு உள்ளே இருக்கும்.

வெகு சில தாவர வகைகள் இந்த உப்புத்தண்ணீர் நிலப்பகுதியில் உயிர் வாழ்கின்றன. அப்படி வாழும் தாவரங்கள் இங்கே நிலவும் சூழலில் வாழ ஏற்றபடி அமைப்புகளை பெற்றுள்ளன. நீரில் நிறைந்துள்ள தாது பொருட்களையும் தாவரங்கள் சமாளிக்க வேண்டியுள்ளது.

இந்த நிலப்பகுதியில் காணப்படும் விலங்குகளில் பெரும்பான்மையானவை மற்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. வெகு சில வகைகளே இங்கே தாக்குப்பிடித்து வாழ்கின்றன.

மாங்ரூவ்!

மாங்ரூவ் மரம் என்பது கிளைகளில் இருந்து வேர்கள் உண்டாகும் ஒரு மர வகையாகும். இந்த மரங்கள் மட்டுமே பிரத்யேகமான தாக்குப்பிடித்தலுடன் இந்த உப்பு தண்ணீர் நிலப் பகுதியில் வாழ்கிறது. இவைகளின் வேர்கள் கடலில் மூழ்கியிருந்தாலும் இவைகளின் உப்புத் தண்ணீரை தாக்குப்பிடிக்கும் தன்மை இவைகளை வாழ செய்கிறது.

இந்த தன்மை இவைகள் நதியின் முகத்துவாரத்திலும் கடற்கரையோரமும் பலுகி பெருக செய்கிறது. இம்மரங்கள் தங்கள் வேர்களில் இருக்கும் நுண்ணிய துளைகள் மூலம் சுவாசிக்கின்றன. இவைகளில் சில கடல் அலையால் நாசம் செய்யப்பட்ட தூண்களிலும் வேர் பிடித்து வாழும். இம்மரத்தின் விதைகள் ஈட்டி வடிவத்தில் இருக்கும். அதனால், மண்ணில் விழும்போது, இவை மண்ணில் புதைகிறது. பெரிய அலையில் விழும் விதைகள், அடித்து செல்லப்படும். ஆனால், இவைகள் வெகு தூரம் நீரில் எடுத்து செல்லப்பட்டு, வெகு காலம் பயணப்பட்டாலும் கூட, அதன்பின் கிடைக்கும் இடத்தில் வேர் பிடித்து வளர்ச்சி அடையும்.

வெட்டினால் உள்ளே வருவேன்!

இந்த மரத்தின் சிக்கல் மிக்க வேர் கூளம் கரையில் உள்ள மண் கடலால் அடித்து செல்லப்படாமல் காக்கிறது. மக்களால் இந்த வகை மரங்கள் வெட்டப்பட்டால், கடல் அலை நிலப்பகுதியினால் முன்னேறி வந்துவிடும்.

உப்போடு விளையாடு!

உப்பு நீரில் வாழ்வது என்பது தாவரங்களுக்கு இயலாத காரியம். ஆனால், வெகு சில உவர் நிலத்தில் வாழும் தாவரங்கள் தாக்கு பிடிக்கும் தன்மை கொண்டுள்ளன. இவைகளின் பெயர் ஹேலோபைட்ஸ். இது போன்ற தாவரங்கள் தன் வேர்களின் துளைகள் மூலமும், இலைகளின் மூலமும் உப்பை வெளியேற்றும். மற்றவையோ தன்னில் உள்ள திசுக்கள் மூலம் உப்பை நீரில் கரைத்துவிடும். இதுபோல உப்பை நீரில் கரைக்கும் தாவரங்களுக்கு தடிமனான தண்டுகளும், இலைகளும் இருக்கும். பார்ப்பதற்கு பாலைவன தாவரம் போலிருக்கும்.

நதி முகத்துவாரம்!

நதிமுகத்துவாரம் என்பது நதியின் வாயிலில் இருப்பது. இந்த இடத்தில்தான் நல்ல தண்ணீர் கடலின் உப்பு தண்ணீருடன் கலக்கிறது. நதி படி படியாக கலந்து ஒன்றுமில்லாமல் போகும்போது, நதி எடுத்து வரும் வண்டல் அங்கே சேருகிறது. இந்த வண்டல் சேற்றில் ஏராளமான ரேக் புழுக்கள் மற்றும் லக் புழுக்கள் வாழ்கின்றன. அவை கரையோர தண்ணீரில் நடந்து உணவு தேடும் பறவைகளுக்கு உணவாகின்றன.

நதிமுகத்துவார விலங்குகள் என்பது நல்ல தண்ணீர் விலங்குகள் மற்றும் உப்பு தண்ணீர் விலங்குகளின் கலவையாகும். சமுத்திரத்தில் இருக்கும் மீன் வகை இங்கே நிலம் சார்ந்த ஓட்டர் மற்றும் ஹெரான் பறவைகளுக்கு உணவாகின்றன.

நதிமுகத்துவாரத்தில் காணப்படும் பெரும்பான்மையான தாவரங்கள் சேறு நிறைந்த கரையிலும் காணப்படும். கிளாஸ்ஓர்ட் என்னும் தாவரம் நீரின் முனையை நோக்கி மெல்ல சென்று அங்கே வேலி போல நிலைத்து இருக்கும். அதன் பின்னே நூல் கயிறுபோன்ற புற்களும் உப்பு சதுப்பு நில புற்களும் வளரும்.

உப்பு ஏரிகள்!

உலகின் எல்லா ஏரிகளும் தூய தண்ணீர் நிறைந்து இருப்பதில்லை. வெளியேற வழி இல்லாத நிறைய ஏரிகள், கடும் உப்பு ஏரிகளாகிவிட்டன. சில உதாரணத்திற்கு சாக்கடல், பெரிய உப்பு ஏரியான உட்டாஹ் போன்றவைகளில் கடலினைவிட அதிகப்படியான உப்பு உள்ளது. பல நூற்றாண்டுகளாக நடைப்பெற்ற ஆவியாதலால் எண்ணற்ற தாது பொருட்கள் தண்ணீர் பகுதியை செறிவூட்டுகிறது. இது அப்பகுதியை வாழுதலுக்கான சூழலாக ஏற்படுத்துகிறது.

சில வகையான உயிரினங்கள் இங்கே வாழ்ந்து தாக்குபிடிக்கின்றன. உப்பு நீர் சிப்பி மீன் என்னும் சிறிய மீன் வகை இங்கே வாழ்கிறது. அதே போல உப்பு நீர் பூச்சிகளின் லார்வா இங்கே வளர்கிறது. சிப்பி மீனிற்கு பூச்சியின் லார்வா, பாசி, பாக்டீரியா போன்று உப்பு நீர் ஏரியின் பிற வசிப்பாளிகள்தான் உணவு.

வடிகட்டி மூக்கன்!

பூளமின்கோ என்னும் நாரை போன்ற செந்நிற பறவை தன் அலகில் தண்ணீரில் உள்ள நுண்ணிய உயிர்களை பிடித்து உண்ணும். இதன் அலகு நுண் உயிரிகளை வடிகட்டும் ஸ்பெஷல் அமைப்புடன் இருக்கும்.

சாக்கடல்!

சாக்கடலின் மட்டம், கடல் மட்டத்தைவிட 396 மீ (1299 அடி) கீழே உள்ளது. ஜோர்டான் நதியின் வெளியேறும் வழியில் இருக்கும் இக்கடல்தான் பூமியின் மிகக்குறைந்த மட்டம் ஆகும். சமுத்திரத்தின் உப்பு அளவை விட சாக்கடலின் உப்பு அளவு ஐந்து மடங்கு அதிகமாகும். இங்கே எந்த உயிரும் வாழ முடியாது என்று கருதப்பட்டதால், இக்கடலுக்கு சாக்கடல் என்று பெயர் கிடைத்தது. ஆனால், இக்கடலிலும் பல வகை பாக்டீரியாக்களும், ஒரே ஒரு வகை பாசியும் உயிர் வாழ்கின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us