
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி - 500 கிராம்உளுந்தம் பருப்பு - 150 கிராம்வெந்தயம் - 1 தேக்கரண்டிஉப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
சாமை அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை நீரில் ஊற வைத்து தனித்தனியே அரைக்கவும். அவற்றை கலந்து, உப்பு சேர்த்து புளிக்க விடவும்.
பின், இட்லி தட்டில் ஊற்றி வேக விடவும். சூடான, 'சாமை இட்லி' தயார். சட்னி, சாம்பார் தொட்டு சாப்பிடலாம். வித்தியாசமான சுவை தரும். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

