
திண்டுக்கல் மாவட்டம், கம்பளிநாயக்கன்பட்டி, ஞானம் நினைவு நடுநிலைப் பள்ளியில், 2003ல், 6ம் வகுப்பில் சேர்ந்தேன்.
பள்ளியில் வகுப்புகள் துவங்கியதும், 'தேவையில்லாமல் காசை செலவு செய்ய கூடாது. சிறுக சிறுக சேமித்தால், பிற்காலத்தில் உதவும்...' என்று அறிவுரைத்த தலைமையாசிரியர் பெருமாள், சிறு சேமிப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
இயன்ற அளவு காசை, வகுப்பாசிரியரிடம் அன்றாடம் கொடுத்து, சேமிப்பு புத்தகத்தில் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். அந்த கல்வி ஆண்டின் இறுதியில், சேமித்த தொகையை, பெற்றோரிடம் வழங்க ஏற்பாடு செய்தார். சேமிப்பில் ஆர்வம் காட்டியவர்களுக்கு ஊக்க பரிசும் தந்தார்.
ஏழ்மை நிலையிலிருந்த என் பெற்றோருக்கு, சேமித்திருந்த பணம் பேருதவியாக இருந்தது. அந்த பழக்கத்தை, வாழ்வில் கடைபிடித்து வருகிறேன்.
தற்போது என் வயது, 28; சேமிக்கும் பழக்கத்தை வாழ்வுடன் பிணைத்து பயிற்சி அளித்த தலைமையாசிரியரை, நன்றியுடன் மனதில் கொண்டுள்ளேன்.
- ஆ.சண்முககுமார், திண்டுக்கல்.
தொடர்புக்கு: 82202 66583

