தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/எண்ணம் சுமந்த காட்சி!

எண்ணம் சுமந்த காட்சி!

எண்ணம் சுமந்த காட்சி!


PUBLISHED ON : அக் 18, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் மாவட்டம், கோ.ராமநாதபுரம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 2012ல், 12ம் வகுப்பு படித்து, தேர்வு முடிவுக்காக காத்திருந்தேன். என் உறவினர் ஒருவர், காதல் திருமணம் செய்ததால், 'மேல் படிப்புக்கு போக வேண்டாம்' என்று, உறவினர்கள் எனக்கு தடை போட்டனர்.

என் தந்தை, அதை லட்சியம் செய்யவில்லை; தேர்வு முடிவு வெளியானதும், கல்லுாரியில், வணிகவியல் பாட பிரிவில் சேர்த்தார்.

'நன்றாக படித்து, பட்டம் வாங்க வேண்டும்; அதை, என் தந்தை கண் குளிர காண வேண்டும்' என, வைராக்கியம் கொண்டேன். மனதில் எண்ணியதை, காட்சியாக மூன்றாண்டுகள் சுமந்தேன்.

பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த தந்தை, நான் பட்டம் பெற்ற போது, மகிழ்ச்சியில் அழுதார் என்று, என் தோழியர் கூறினர். எண்ணம் ஈடேறியதால் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன்.

இப்போது, என் வயது, 24; கணினி இயக்குபவராக பணியாற்றுகிறேன். குடும்பத்தில், முதல் பெண் பட்டதாரியை உருவாக்கிய பெருமைக்குரிய என் தந்தையை போற்றுகிறேன்.

- க.தனலட்சுமி, திண்டுக்கல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us