தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விஞ்ஞானி (1)

விஞ்ஞானி (1)

விஞ்ஞானி (1)


PUBLISHED ON : ஏப் 11, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டியர் அம்மூஸ்.... இந்தப் பகுதியில் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது கண்டுபிடிப்புகள் வெளியாகும். படித்து பயன்பெறுங்கள்!

அமெரிக்காவுக்கு முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தவர்!

அமெரிக்க நாட்டுக்கு முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தவர் ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சன். ஆனால், இவர் அமெரிக்கரல்லர்.

என்ன குட்டீஸ் இந்த செய்தி ஆச்சரியமா இருக்கா?

ஜெர்மனியிலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய ஒரு ஜெர்மன் யூத விஞ்ஞானிதான் என்பது ஒரு சுவையான செய்தி.

அன்ன போலிஸ் என்ற இடத்தில் உள்ள அமெரிக்கக் கடற்படை அகடமியில் பத்து பேரை அமெரிக்க ஜனாதிபதி நியமிக்க இருந்தார். அதில் ஓர் இடத்தைத் தனக்குப் பெறுவதற்காக, நெவாடா மாநிலத்திலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வந்த மைக்கேல் சன்னுக்கு அது கிடைக்கவில்லை.

இருந்தாலும் மைக்கேல் சன்னின் ஆர்வத்தைக் கண்ட ஜனாதிபதி அவரை நேவல் அகடமியின் தலைமை அதிகாரியைச் சந்திக்கும்படி சொல்லி யனுப்பினார். அதன்படி அவரும் சென்று சந்தித்தார். ஜனாதிபதியே சொல்லி விட்ட பின்னர் மறுக்க முடியாமல், புதிதாக உருவாக்கப்பட்ட பதினோராவது இடத்தில் ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சன் அமர்த்தப் பட்டார்.

தன்னைத் தத்தெடுத்து தன் படிப்புக்காகப் பெருந் தொகையைச் செலுத்திய அமெரிக்க நாட்டுக்கு, மைக்கேல்சன் பிற்காலத்தில் ஒளியின் அமைப்பையும், சக்தியையும் ஆராய்ந்து வெளியிட்டதன் மூலம் நோபல் பரிசைப் பெற்று, தன் நன்றிக் கடனைத் தீர்த்தார். அமெரிக்க நாட்டுக்கு அதற்கு முன்னர் எந்தத் துறையிலும் நோபல் பரிசு கிடைத்ததில்லை.

முதல் நோபல் பரிசை அமெரிக்காவுக்குப் பெற்று தந்தவர் என்பதை விட, அவர் ஓர் அயல் நாட்டு விஞ்ஞானி என்பது பெருமைக்கும், வியப்பிற்கும் உரிய செய்தியாகும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us