PUBLISHED ON : ஏப் 11, 2014

அ நிறம் | அளவு
மகாத்மா காந்தி அமெரிக்காவுக்குச் சென்றதே இல்லை. அமெரிக்கா அழைத்தபோது கூட அதை ஏற்க மறுத்துவிட்டார். மகாத்மா காந்தி விமானத்தில் பயணம் செய்ததே இல்லை. அவரது தென்னாப்பிரிக்கா பயணம், இங்கிலாந்துப் பயணம், எல்லாம் கப்பலில்தான். இந்தியப் பயணம் முழுவதும் புகை வண்டியில்தான். பிரிட்டிஷ் ராணி எலிசபெத் திருமணம் செய்து கொண்ட போது, அவருக்குத் திருமணப் பரிசாக தானே செய்த மேஜை விரிப்பு ஒன்றை அனுப்பிவைத்தார் காந்திஜி. இந்த மேஜை விரிப்பை எலிசபெத் ராணி, லண்டன் மியூசியத்துக்குக் கொடுத்து விட்டார்.
