தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விஞ்ஞானி! (5)

விஞ்ஞானி! (5)

விஞ்ஞானி! (5)


PUBLISHED ON : மே 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குதிரைச் சக்தி என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு, அதை இயந்திர சக்தியை மதிப்பிடவும், அளவிடவும் பயன்படுத்திய முதல் மனிதர் ஜேம்ஸ்வாட்.

மனித சக்தியால் செய்யக் கூடிய பணிகளை இயந்திரங் களைக் கொண்டு செய்தால் மனிதர்களின் நேரமும், உழைப்பும் மீதமாகும் என்றும் சிந்தித்த விஞ்ஞானி ஜேம்ஸ்வாட் ஆவார்.

பெரும்பாலான விஞ்ஞானிகளைப் போலவே ஜேம்ஸ்வாட்டும் ஒரு சாதாரண வியாபாரி யின் மகனாகப் பிறந்து இளம் வயதில் மிகவும் சிரமப்பட்டு ஒரு தொழிற்பட்டறையில் பணியாற்றி பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானியாக மாறியவர்தான்.

29-ம் வயதில் முதல் நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்தார் ஜேம்ஸ்வாட். ஆனால், அதற்கு அடிப்படையாக அமைந்தது ஒரு சிறிய டீ கெட்டில்தான். அதுமட்டுமல்ல ரயில், கப்பல் மற்றும் பல இயந்திரங்களை இயக்குவதற்கும் நீராவிச் சக்தியைப் பயன்படுத்த முடியும் என்பதை ஜேம்ஸ்வாட் கண்டறிந்தபோது அவருக்கு வயது பத்துதான்.

ஒருநாள் ஜேம்ஸ்வாட்டின் சிற்றன்னை அடுப்பில் டீ கெட்டிலில் நீரை ஊற்றிக் கொதிக்க வைத்து விட்டு, வேறு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந் தார். பக்கத்தில் ஜேம்ஸ்வாட் அமர்ந் திருந்தார்.

அடுப்பிலிருந்த கெட்டிலில் கொதித்துக்கொண்டிருந்த நீரிலிருந்து கிளம்பிய ஆவி, கெட்டிலின் மூடியை வலிந்து தள்ளிக் கொண்டு மேலேழும்பி வர முயன்ற காட்சியை பார்த்த ஜேம்ஸ் வாட்டுக்கு மிகுந்த வியப்பை ஊட்டியது.

நீராவிக்கு இவ்வளவு சக்தியா? என்று வியந்தார் ஜேம்ஸ்வாட். அவர் அவ்வாறு அடுப்பிலிருந்த கெட்டிலையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே வந்த அவருடைய சிற்றன்னை அந்தக் காட்சியைப் பார்த்து, ''என்ன ஜேம்ஸ்! அடுப்பில் கெட்டிலில் நீர் கொதித்துக் கொண்டிருக்கிறதே... நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் இங்கே? என்னைக் கூப்பிடக் கூடாதா?'' என்று ஜேம்ஸ்வாட்டை அன்புடன் கடிந்து கொண்டார்.

ஆனால், அந்த இளம் விஞ்ஞானி யின் மூளையில் சுற்றிச் சுழலும் ஆராய்ச்சி எண்ணங்களைப் பற்றி அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

அதனால்தான் அவர் ஜேம்ஸ்வாட்டைத் திட்டியனுப்பினார். அடுப்பில் இருந்த கெட்டில் மூடியை முட்டித்தள்ளிய நீராவியின் ஆற்றலைப் பற்றி சிறுவன் ஜேம்ஸ்வாட்டுக்கு அப்போது ஏற்பட்ட சிந்தனைதான், பிற்காலத்தில் ரயிலுக்கும், கப்பலுக்கும் பயன்படக் கூடிய நீராவி இயந்திரங்களை உருவாக்க அடிப்படையாக அமைந்தது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us