தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விஞ்ஞானி (9)

விஞ்ஞானி (9)

விஞ்ஞானி (9)


PUBLISHED ON : ஜூன் 06, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விலை மலிவான ஓர் உலோகமாக இன்று திகழும் அலுமினியம், ஒரு காலத்தில் வெள்ளியை விட ஏன், தங்கத்தை விட விலை மதிப்பு மிக்க பொருளாக இருந்தது.

என்ன நம்ப முடிய வில்லையா? நீங்கள் நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மை!

அலுமினியம் கண்டுபிடிக்கப் பட்ட தொடக்க காலத்தில் அது மிகவும் குறைந்த அளவே உற்பத்தி செய்யப்பட்டதால், விலை அதிகமாக இருந்தது. அதனால், பெரும் செல்வந்தர்கள், பிரபுக்கள், அரசர்கள் ஆகியோரின் மாளிகைகளில்தான் அலுமினியப் பாத்திரங்கள் காணப்பட்டன. அக்காலத்தில் ஒருவர் வீட்டில் ஒரு சிறிய அலுமினியப் பாத்திரம் இருந்தாலும் அந்த வீட்டின் மதிப்பும், தகுதியும் பன்மடங்கு உயர்ந்ததாகக் கருதப்பட்டது.

இப்படி தகுதியையும், மதிப்பையும் உயர்த்த அளவுகோலாகப் பயன்பட்ட அலுமினியம் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு சுவையான நிகழ்ச்சியாகும்.

சி.எம்.ஹால் என்ற ஒரு சிறுவன், ஒருநாள் தன் வீட்டு அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அங்கே அவனுடைய தந்தை சேகரித்து வைத்திருந்த சில பழைய புத்தகங்கள் இருந்தன. அதில் ரசாயன சாஸ்திரம் பற்றிய நூல் ஒன்றும் இருந்தது. அது அச்சிறுவனைக் கவர்ந்தது. முன்னும், பின்னும் சில பக்கங்கள் கிழிந்து மக்கிப் போயிருந்த அந்த நூலில், அலுமினியம் என்ற <உலோகத்தைப் பற்றிய பயனுள்ள பல தகவல்கள் இருந்தன.

அக்காலத்தில் தங்கத்தை விட மதிப்பு மிக்கதாக இருந்த அலுமினியத்தைப் பற்றியவையாக அந்த விவரக் குறிப்புகள் இருந்ததால் ஹால், அவற்றை மிகுந்த ஆர்வத்தோடு படித்தான்.

'எல்லா இடங்களிலும் உள்ள களி மண்ணில் கூட அலுமினியம் இருக்கிறது' என்ற குறிப்பு ஒன்றும் அந்த நூலில் இருந்தது.

அது சிறுவன் ஹாலை வியப்பில் ஆழ்த்தியது. சாதாரணக் களிமண்ணில் கலந்திருக்கும் அலுமினியம் இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்படுவது ஏன்? அதிகமான அளவில் அதை யாரும் கண்டெடுத்துக் கொடுக்காததால் தானே? நிறைய அலுமினியம் கிடைத்தால் விலை மலிவாகி விடும் அல்லவா? அதைக் கண்டுபிடித்து விட்டுத்தான் மறு வேலை என்று ஹால் முடிவு செய்தான்.

முடிவு செய்வது எவருக்கும் எளிது. சாதிப்பது அவ்வளவு எளிதில்லையே!

குளம் குட்டை களிலுள்ள களிமண்ணையெல்லாம் வாரிக் கொண்டு வந்து நீரில் கரைத்து அதிலிருந்து அலுமினியத்தைத் தேடினான் ஹால்.

நல்ல தண்ணீர் மண் குழம்பாகியதே தவிர அலுமினியம் இருப்பதற்கான அறிகுறியே தோன்றவில்லை. ஆனால், அதற்காக ஹால் தன் முயற்சியைக் கைவிடவில்லை.

களிமண்ணில் அலுமினியம் இருப்பதாக வேதியியல் நூலில் கூறப்பட்டுள்ளது. அதை எளிதாகப் பிரித்தெடுக்க ஓர் எளிய வழியைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று அவன் முடிவு செய்துக் கொண்டான். அவனோ அறிவியல் கல்வியைக் கற்றவனல்ல. அப்படிப்பட்ட அறிவியல் பணிகளில் அவனுக்கு அனுபவமும் இல்லை. என்றாலும், அவன் மனம் தளராமல் முயற்சி செய்து வந்தான்.

தம் தந்தை சேர்த்து வைத்திருந்த பழைய வேதியியல் நூலையே தனக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் கொண்டு அந்நூலில் கூறப்பட்டிருந்த செய்முறை களைச் செய்வதற்குத் தேவையான துணைக் கருவிகளைத் தானே செய்து கொண்டான். மின்சாரத்தைப் பயன்படுத்தி அலுமினியம் கலந்த களிமண் குழம்பைப் பாகுபாடு செய்தால் சுத்தமான அலுமினியம் கிடைக்கும் என்று ஹால் நம்பினான்.

நாட்கள் நகர்ந்தன-

சிறுவன் ஹால் இளைஞனாக வளர்ந்தான். அவனது முயற்சியும் தொடர்ந்தது.

மின்சக்தியைத் தோற்றுவிக்கும் மின்சார பாட்டரிகள் அவனுடைய முயற்சிக்கு தேவைப் பட்டன. அன்றிருந்த நிலையில் மின்சார பாட்டரிகளை விலை கொடுத்து வாங்க ஹாலிடம் வசதியிருக்கவில்லை. அதனால், அப்படிப்பட்ட பாட்டரி ஒன்றைத் தானாகவே உருவாக்க எண்ணினான். சில பலகைகளை அறுத்தான். துத்தநாகத் தகடுகளை வெட்டிப் பொருத்தினான். இவ்வாறாக ஒரு பாட்டரி உருவாக்கிக் கொண்டான்.

அலுமினியக் கலவை உலோகங்கள் சிலவற்றைச் சேகரித்து உருக்கி, அந்தப் பொருளில் மின்சாரத்தைச் செலுத்தினான். அப்போது சுத்தமான அலுமினியம் கிடைத்தது. கலவை உலோகங்களிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுக்க ஹால் கையாண்ட முறை மிகவும் எளிதாக இருந்தது. செலவு மிகக் குறைவாக இருந்தது. அந்த முறையைப் பயன்படுத்தியதால் குறைந்த செலவில் நிறைந்த அளவில் அலுமினியத்தை உற்பத்தி செய்வதும் சாத்தியமாயிற்று. அதன் பின்னர் தான் அலுமினிய உற்பத்தி பெருகிற்று. செல்வந்தர்களின் மாளிகைகளில் மட்டுமே இருந்து வந்த அலுமினியப் பாத்திரங்கள், ஏழைகளின் குடிசைகளிலும் இடம் பெறத் தொடங்கின.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us