PUBLISHED ON : செப் 05, 2020

தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு மாங்குடி, முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில், 1966ல், 7ம் வகுப்பு படித்தபோது, தலைமை ஆசிரியராக இருந்தார் பாலசுப்ரமணியன். பள்ளியின் பின்புறம் காய்கறி தோட்டம் அமைத்து, மரக்கன்றுகளையும் நட்டிருந்தார். வகுப்புகள் முடிந்தபின், தோட்ட வேலையில் ஈடுபடலாம் என அறிவுறுத்தினார்.
தன்னார்வலராக இணைந்து பணியாற்றினேன். அந்த அனுபவம், வீட்டுத் தோட்டம் அமைக்கும் ஆர்வமாக மாறியது. போதிய இட வசதியில்லை என்றாலும், கருகாமல் இருந்தது விருப்பம்.
நன்கு படித்து, பின்நாளில் நிலம் வாங்கி தோட்டம் அமைத்தேன். தென்னை, மா, பலா, வாழை மரங்களை நட்டேன்; காய்கறியும் பயிரிடுகிறேன். பசுமையாக குலுங்குகிறது. அன்று போட்ட விதை தான் இதற்கு காரணம்.
தற்போது என் வயது, 66; வீட்டுத்தோட்ட காய்கனிகளில், தலைமை ஆசிரியரின் முகத்தை காண்கிறேன்.
- எஸ்.ராஜேந்திரன், தஞ்சாவூர்.
தொடர்புக்கு: 99443 47407.
