
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
தனியா - 1 கப்
காய்ந்த மிளகாய் - 6
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
புளி, பெருங்காயத்துாள், கறிவேப்பிலை -- சிறிதளவு
உப்பு, தண்ணீர், நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, தனியாவை வறுக்கவும். பின், காய்ந்த மிளகாய், பூண்டு, பெருங்காயத்துாள், கறிவேப்பிலை, தேங்காய் துருவலை இளஞ்சூட்டில் வறுக்கவும். ஆறியதும், உப்பு, புளி சேர்த்து கெட்டியாக அரைக்கவும். சுவைமிக்க, 'தனியா துவையல்' தயார்.
சூடான சாதத்தில் நெய்யுடன் கலந்து சாப்பிடலாம். சுவை, சத்து மிக்கது.
- பி.பாரதி, திருச்சி.