தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பிரிவினையும் - தனியான வளர்ச்சியும்

பிரிவினையும் - தனியான வளர்ச்சியும்

பிரிவினையும் - தனியான வளர்ச்சியும்


PUBLISHED ON : டிச 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உயிரினத்தின் ஒரு இனத்தின் தன்மை என்னவென்றால் அவற்றின் பல வகை களுக்கு இடையேயான இனக்கலப்புதான். அதோடு அவைகளின் ஒவ்வொரு வகைக் கென குறிப்பிடத்தக்க கூறு, அமைப்பு, தனிபண்பு உண்டு. வித்தியாசங்கள் ஒவ்வொரு இனத்தின் வனங்களுக்குள்ளும் காணப்படும். ஒரே இனத்தின் வகைக்குள் காணப்படும் வித்தியாசம் குறைவாகவே இருக்கும்.

ஒரு இனத்திலோ, அவற்றின் வகையிலோ காணப்படும் வித்தியாசங்களுக்கு காரணம் மரபணுக்கள்தான். இனத்திற்குள்ளோ, அவற்றின் வகைகளுக்குள்ளோ இனவிருத்தி நடக்கும்போது மரபு அணுக்களின் தன்மைகள் தொடர்ச்சியாக நிலை மாற்றம் கொள்கிறது. வித்தியாசங்கள் ஒரு வகையின் முழுமைக்கும் பரவினாலும் அதன் இனம் மாறாது. ஆனால், ஒரு தடை ஏற்பட்டு பெரும்பான்மையான இனத்திலிருந்து அவற்றின் வகைகளில் சில தனியாக பிரியும் போது, வளர்ச்சி வேறுவிதமாய் அவைகளுக் குள் ஏற்படுகிறது.

காலப்போக்கில் தனியாக பிரிந்த வகைகள் தாய் வகையறாக்களிலிருந்து வேறுபட்டு போய் விடும். தடையால் பிரிந்து உருவான உயிரின வகை-தாய் இனத்தோடு மறுபடி இனக்கலப்பு செய்யவே முடியாது. பிரித்த தடை விலகினாலும் அவைகளுக்கு இடையில் இனக்கலப்பு சாத்தியமில்லை.

* பட்டாம்பூச்சிகள் சிறிய, வளரும், ஒடுக்கமான நீண்ட கரைமேட்டினை எளிதாய் கடந்துவிடும். அந்த கரை மேடு வலுவான தடை அல்ல. அதன் பட்டாம்பூச்சி வகைகளிடையே கலப்பு எளிதாய் ஏற்படுகிறது.

*நிலத்தில் மேடாய் இருந்த தடுப்பு மலை தொடர்ச்சியாய் வளர்ச்சி பெறும்போது பிரிக்கப்பட்ட ஒரு இனத்தின் வகைகள் தெளிவாக தெரியும்படியான வேறுபாடுகளை பெற்றுவிடுகிறது.

* வெடிப்பால் மலைகளில் பிளவுகள் ஏற்பட்டு பலவகை பட்டாம்பூச்சி கூட்டத்தினிடையே கலப்பு ஏற்படுகிறது. ஆனால், இந்த கலப்பு ஏற்பட்டாலும் இன விருத்தி செய்ய இயலாமல், தங்களுக்குள் வேறுபட்டு நிற்கின்றன. ஒரே வகை உணவுக்காக போட்டியிடாவிட்டால் பலவகை பட்டாம் பூச்சிகள் ஒரே இடத்தில் வாழ முடியும்.

புவியியல் ரீதியான தனிமைப்படல்!

புதிய வகையில் ஒரு இனத்திலிருந்து பல வகைகள் தோன்ற புவியியல் காரணங்கள் பெரிய பங்கு வகிக்கிறது. முதன் முதல் உயிரினம் தோன்றியதிலிருந்து பூமியின் மேற்பரப்பில் ஏகப்பட்ட மாறுதல்கள் புவியியல் ரீதியாக ஏற்பட்டு கொண்டிருக் கின்றன. கடல் மட்டத்தில் உருவான எரிமலை, உயிரினமே வாழாத நிலப்பகுதி களை வெளிகொணர்ந்தன. மலை தொடர்ச்சி கள் ஏற்பட்டன.

சமுத்திரங்கள் பொங்கி நிலப்பகுதிகளை சூழ்ந்து கொண்டன. குறிப்பாக, மிகப் பெரிய பிளப்பு சூப்பர் கண்டம் எனப்படும் பாங்கியா வில் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டு களுக்கு முன் ஏற்பட்டது.

கொஞ்ச கொஞ்சமாக அப்பிளப்பால் கண்டங்கள் சமுத்திரங்களால் பிரிக்கப்பட்டு, இன்றைய புவியியல் அமைப்பு ஏற்பட்டது. பெரும்பாலான உயிரின வேறுபாடுகள் மெதுவாக, புவியியல் மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்படலாயிற்று.

இன்றைய காலகட்டத்தில் மனிதனின் செயல்பாடுகளால் புவியியலில் அதிரடி மாற்றங்கள் வேகமாய் ஏற்படுகின்றன. மத்திய அமெரிக்க பறவை மற்றும் பூச்சி வகைகளில் வேறுபாடுகள் பனாமா கால்வாய் உருவாக்கப்பட்ட பின் ஏற்படலாயின. ஒரே இனத்தின் இரு வகைகளுக்குள் காட்டை அழித்தல் மூலம் தொடர்பே இல்லாமல் போகிவிடுகிறது.

உயிரின பிரிப்பு!

சில வேறுபாடுகள் ஒரு குறிப்பிட்ட வகையை புதிய இனமாய் மாறச் செய்கின்றன. வாழும் இடத்தில் இவை எடுத்துகொள்ளும் அதிகபட்ச ஆளுமை அவைகளை புதிய இனமாய் மாற்றுகிறது. இந்த நிலைமையில் புதிதாய் உருவான உயிரினமும், முதன் முதலில் இருந்த அவற்றின் தாயினமும் என இரண்டு இனங்களும் உயிர்வாழும். உதாரணத்திற்கு, ஒரு ஏரியில் புதிதாய் உருவான தங்க மீன் தன் முன்னோர்கள் சாப்பிட்ட வேர்கள் மற்றும் பூச்சிகளை தவிர வேறுவகை உணவுகளையும் சாப்பிடும்படி வளர்ச்சி பெற்றுள்ளதை காணலாம்.

*ஒருவகை தங்க மீன் என்பது தூய நீர் ஏரிகளின் அடியில் வேர்களையும், பூச்சிகளையும் உண்டு வாழ்கின்றன. இவைகளுக்கு சிறிய குடலும், தண்ணீரிலிலும் உணவை வடி கட்டும் செதில்களும் இருக்கும்.

*தங்க மீன் களுக்கு பெரிய நீண்ட குடலும், பல செதில்களும் இருப்பதால் அவைகளால் வேறு வகை உணவு களையும் உட்கொள்ள முடிகிறது. வேறு வகை உணவு கிடைக்கும் நீரின் மேற்பகுதியில் அவை வாழ்கின்றன.

*மேற்பரப்பு வாசிகள் அதிக தட்டை வடிவம் வளரபெற்று பெரிய வாய்களுடன் காணப்படுகின்றன. இது அதிகப் படியான தண்ணீரை உட்கொண்டு வேறு வகை உணவுகளை உண்ண உதவு கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us