தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஹேரியட் டப்மேன் (4)

ஹேரியட் டப்மேன் (4)

ஹேரியட் டப்மேன் (4)


PUBLISHED ON : டிச 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தன் வண்டியில் அவளை ஏற்றி வசதியாக காய்கறி மூட்டைகளுக்கு இடையே உட்கார வைத்தவர்... பயமின்றி நீ இரவில் நன்றாக உறங்கிக்கொள். நாளை இரவு நம் வண்டி அந்த சுதந்திர நாட்டு எல்லைக் கோட்டை தொட்டவுடன், கண் இமைக்கும் நேரத்தில் நீ வண்டியிலிருந்து குதித்து எல்லைக் கோட்டைத்தாண்டி ஓடிவிட வேண்டும்.

நீ என் வண்டியிலிருந்து குதிக்க ஏதுவாக என் வண்டியை சற்றே திருப்பி எல்லைக் கோட்டருகில் நிறுத்திக்கொள்கிறேன். கண் இமைக்கும் நேரத்தில் நீ குதித்து திரும்பிப்பார்க்காமல் எல்லைக் கோட்டைத் தாண்டி ஓடிவிடு. அதற்கு மேல் நான் வண்டியை அங்கே நிறுத்த முடியாது. ஏதேனும் வீண் பிரச்னை முளைக்கலாம். நினைவில் வைத்துக்கொள். கண்சிமிட்டும் நேரத்தில் நீ வண்டியிலிருந்து குதித்து ஓடிவிடு. நீ கால்வைக்கப்போகும் இடம் நியூஜெர்ஸி. நீ அந்த நிமிடமே ஒரு சுதந்திரப் பறவை.

இப்படித்தான் திரும்ப, திரும்பச் சொல்லி அந்த சிறுமியை மனம் நிறைந்த வாழ்த்துக் களுடன் தன் வண்டியில் ஏற்றினார். உடலும், உள்ளமும் பதற... அந்த வண்டி சற்றே திரும்பி நிற்கும் நிமிடத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி, வண்டி சற்றே திரும்புவதை உணர்ந்து, சட்டென்று குதித்து எல்லைக் கோட்டைத் தாண்டி ஓட ஆரம்பித் தாள்.

ஓ! அந்த கரிய இருளில் ஒரு கறுத்த உருவம் (கரிய உடை அணிந்த) வண்டியிலிருந்து குதித்து ஓடுவதை யாராலும் கவனித்திருக்க முடியாது.

மனம் வழிய வழிய மிக படபடப்பான மகிழ்ச்சி வெள்ளம். இது நிஜமா? இது நிஜமா? இனி நான் அடிமை அல்ல என்று சொல்லிக் கொண்டே ஓடினாள்... ஓடினாள்... ஓடிக்கொண்டே இருந்தாள். 'இது நிஜமா! நான் ஏக்கம் மிகுந்த கனவுகளை நிஜமாக்கி விட்டேனா' என்று திகைத்துப் போய் நிற்கையில்... மிக மெதுவாக வெளி உலகை எட்டிபார்க்கும் எண்ணத்தில் ஒரு தங்க பாளமாக சூரியனும் பளீரென வெளிவர... ஓ! இனி என் வாழ்வில் என்றுமே சூரிய உதயம்தான்... அஸ்தமனம் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை என்று நெஞ்சு கொள்ளா மகிழ் வோடு தெய்வத்திற்கு நன்றி கூறினாள்...

இப்படித்தான் வெகுநேரம் பிரமித்து நின்றவள் சட்டென்று நிஜங்களுக்கு திரும்பினாள்.

'ஓ! இந்த மகிழ்ச்சியை நான் மட்டும் அனுபவித்தால் எப்படி... எங்களின் அடிமை குடும்பங்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டாமா?' என்று எண்ணிய வள் உடனே செயலில் இறங்கினாள். அங்கே கடைகளில்... வீடுகளில்... சிறு சிறு ஓட்டல் களில் எங்கு எங்கெல்லாம் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனரோ, அங்கெல்லாம் சென்று வேலை செய்து அங்கு கொடுக்கும் கூலியை சிறிது சிறிதாக சேமிக்க ஆரம்பித்தாள்.

கையில் சற்றுகூடுதலாகவே பணம். உடலிலும், உள்ளத்திலும் அளப்பற்ற துணிச்சல்.வட நட்சத்திரத்தின் ஆசி. கடவுளின் அரவணைப்பான ஆசி. இவைகள் போதாதா என்ன அவளின் முயற்சிகளுக்கு வெற்றி தேடித்தர?

ஒரே ஒரு வருடத்தில் தன் பிறந்த ஊரான மெரிலான்டிலிருந்து தன் பெற்றோர்-சகோதர சகோதரிகள் மற்றும் ஐம்பது அடிமைகளை மிகவும் சமத்காரமாக மீட்டுக் கொண்டு வந்து விட்டாள். இப்படி இவள் கடத்தி சென்ற அடிமைகளின் எண்ணிக்கை 700ஐ தாண்டும். இதில், வேடிக்கை என்னவென்றால் இவளால் கடத்திச் செல்லப்பட்ட இந்த 700 அடிமைகளில் ஒருவர் கூட பிடிப்படவே இல்லை. முதலாளி களின் கோபத்திற்குக் கேட்பானேன்.

இந்த அடிமை துரோகியை பிடித்துத் தருவோருக்கு 4000 டாலர் வெகுமதி அளிக்கப் படும் என்று சற்றும் சளைக்காமல் அறிவித்தனர்.

ஓ! இந்த அறிவிப்பை பார்த்த பின்னர் பல குண்டர்கள் கூட்டம் இந்த கேடு கெட்ட அடிமைப் பெண்ணை இரவு, பகல், நட்ட நடுநிசி என்று பாராமல் அங்குலம் அங்குலமாக தேட்டை போட ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு முறையும் கடவுள் இவளுக்குத் துணை இருந்தார் என்பது சத்தியம்.

ஒருமுறை அதீத அலைச்சலால், உடல் களைத்துப்போய்... அங்கு இருந்த ஒரு பார்க்கில் இருந்த இருக்கையின் மீது படுத்து தன்னை அறியாமல் உறங்கிவிட்டாள்.

இவள் படுத்திருந்த அந்த பெஞ்சிற்கு அருகி லிருந்த மரக்கிளையில் இருந்து தொங்கியது ஒரு பெரிய அட்டை. அந்த அட்டையில் பெரிய கொட்டை எழுத்தில், ''இதோ இந்த படத்திலிருக்கும் நீக்ரோ அடிமை மிகவும் பயங்கரமானவள். எதற்கும் துணிந்தவள். நம் அரசாங்கத்திற்கு எதிராக அடிமைகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவள். இந்த படுகீழ்த்தரமான துரோகியை உயிருடனோ... அல்லது பிணமாகவோ கொண்டு வருபவர் களுக்கு 4000 டாலர் கொடுக்கப்படும். ஊரை அங்குலம் அங்குலமாக தேட்டை போடுங்கள். கை நிறைய சன்மானத்தை பெற்றுக்கொண்டு... உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்,'' என்று எழுதப்பட்டிருந்தது.

எழுதப்படிக்கத் தெரியாத அந்த வீரச்சிறுமி இந்த விபரீத விளம்பரத்தைப் பற்றி அறியாமல்... நன்றாக குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள் என்பது தான் வேடிக்கை. அந்தப் பார்க்கில் பயங்கர ஆயுதங் களுடன் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த குண்டர்களின் கண்களில் இவள் படாமல், நிதானமாக தூங்கி எழுந்து, தளிர் நடை போட்டு தன் இருப்பிடத்தை அடைந்தாள் என்றால்... தெய்வமே இவளுக்கு காவலாக இருந்தது என்பதை விளக்கத் தேவை இல்லை அல்லவா?

ஓ! அதன் பின்னரே, அவள் மாறுவேடத்தில் வெளியே செல்லத் துவங்கினாள்.

ஒருமுறை கைக்கெட்டும் தூரத்தில் ஒரு பயங்கர குண்டன் நின்று கொண்டிருந்தான். எனினும் அவனால் இவளை இனம் கண்டு கொள்ள முடியவில்லை என்பது எத்தனை விபரீத விந்தையான விஷயம்!

அன்று, மிகவும் அபாயகரமான இடத்தை கடந்து செல்லவேண்டிய மிக இக்கட்டான நிலை. இவளை நம்பி பதினைந்து அடிமைகள் ஒரு ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களை உடனே இடம் மாற்ற வேண்டும். இல்லையெனில், அவர்களின் கதி அதோகதி தான். என்ன செய்வது என்று புரியாமல் அந்த பரிதாபத்திற்குரிய பதினைந்து அடிமைகளும் கலங்கிப்போய் கண்ணீர் வடித்துக்கொண்டே டப்மேன் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தனர்.

இவளால் கிடைக்கும் சன்மானத்திற்காக கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே கொலைக்கார கூட்டம். இந்த கொலைக்காரக் கூட்டத்தைக் கடந்து தான் தன் அடிமை சகோதரர்கள் பதினைந்து பேரும் ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தை அடைய முடியும். ஆயினும் இந்த மிக பயங்கரமான இக்கட்டான சூழலைக்கண்டு சிறுமி ஹேரியட் டப்மேன் சிறிதும் தயங்க வில்லை... தெய்வத்தின் அளப்பற்ற ஆசி.வடநட்சத்திரத்தின் அளப்பற்ற நல்ல எண்ணம் என்னை அணைத்துக்கொண்டிருக்கும் போது, நான் எதற்காக தயங்க வேண்டும் என்று தன்னை நிமிர்த்திக் கொண்டவள்...

ஒரு பெரிய கறுப்பு அங்கியால் தலை யோடு கால் உடம்பையும், முகத்தையும் நன்றாக மூடிக்கொண்டவள் கழுத்தில் நிறைய கோழிகளையும், கோழி குஞ்சு களையும் நீண்ட மாலையாகக் கட்டி கழுத்தில் மாட்டிக் கொண்டாள். மிக வயதானவளைப் போல கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு, கோணலும் மாணலுமாக விந்தி விந்தி ஏதோ முணுமுணுத்துக்கொண்டே அந்த குண்டர்கள் நடமாடிக் கொண்டிருக்கும் இடத்தை உற்று பார்த்தபடியே இவளை கையெட்டும் தூரத்தில் நெருங்கி விட... சட்டென்று தான் கழுத்தில் மாலையாக போட்டிருந்த கோழிகளின் கயிற்றை அவிழ்த்து விட, உடனே அவைகள் நாலா புறமும் சிதறி ஓட... பாவம் இந்த வயதான கிழவியால் அவைகளை எப்படி ஓடி ஓடி பிடிக்க முடியும்? நொண்டி நொண்டிக் கொண்டே அவைகளை பிடித்து விடும் பாவனையில் ஏதோ கத்திக்கொண்டே அவைகளை துரத்தி ஓட... இந்த காட்சியை கண்ட அந்த கங்காணி ஏதோ பெரிய ஒரு ஹாஸ்யத்தை பார்த்து விட்டது போல்... அட இந்த கிழவிக்கு இந்த வயதில் ஏன் இத்தனை பேராசை? என்று உரக்கக் கூவி சிரிக்க... கண் இமைக்கும் நேரத்தில் அந்த பொல்லாத கிழவி அங்கிருந்து தப்பிவிட்டாள்!

இந்த வீரப்பெண்மணி தனி ஒருத்தியாக பதினைந்து வயதில் ஆரம்பித்த இந்த தர்மயுத்தத்தில் 800 க்கும் மேற்பட்ட அடிமை களை சிறிதும் சேதமின்றி தப்ப வித்து, அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கி இருக்கிறாள். ஆயினும் இவளின் நாற்பதாவது வயதில்தான் குடியரசுத் தலைவர் லிங்கன் அடிமை ஒழிப்பு சட்டத்தைக் கொண்டு வந்து அமுலாக்கினார்.

அதன் பின்னர் இவளின் அந்த ரயில் பாதை கண்டக்டர்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டாலும், இவளுடைய நடைப்பயணம் இவளின் ஐம்பது வயதுவரை நீண்டுகொண்டே போயிற்று.

'அடிமைகள் ஒழிப்பு சட்டம் மட்டும் கொண்டு வந்தால் போதுமா? மற்றபடி அவர்களுக்கு எந்த விதமான நன்மைகளும் கிடைக்கவே இல்லை. எங்கள் இனத்தவர்க்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன்' என்று ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து, அதில் வெற்றியும் கண்டவள் டப்மேன்.

இவளின் வீரதீர சாகசங்களை வியந்து மிகப்பெரும் கூட்டமே இவளுக்கு துணை நின்றனர். இந்த கூட்டத்தில் வெள்ளைக்காரர் கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா குடும்பத் தினர் முதல் முறையாக ஜனாதிபதி பதவி ஏற்கும் முன், இவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செய்துவிட்டு வந்தார்கள் என்று கூறப்படுகிறது.

முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us