PUBLISHED ON : ஜூன் 29, 2012

அ நிறம் | அளவு
பறவைகளுள் வித்தியாசமான பறவை கிவி. இதற்கு சிறகுகள் கிடையாது. இது நியூசிலாந்தில் மட்டுமே காணப்படும். இவற்றிற்கு சிறகுகளுக்கு பதில் ரோமங்கள் இருக்கும்; பூனையை போல் கத்தும்; மரத்தின் மேல் கூடு கட்டி வாழாது; பூமிக்கடியில் பள்ளம் தோண்டி முட்டையிடும்; அந்த முட்டையின் எடை, பறவையின் எடையில் நான்கில் ஒரு பங்கு இருக்கும்; ஆண் பறவை தான் அடைகாக்கும்; நீண்ட அலகின் நுனியிலேயே மூக்கு துவாரங்கள் இருக்கும்; ஆந்தையைப் போலவே, இதற்கும் பகலில் கண் தெரியாது; இரவில் தான் தெரியும். இப்படி மிகவும் வித்தியாசமானது இந்த கிவி பறவை.
