PUBLISHED ON : ஜூன் 29, 2012

அ நிறம் | அளவு
காலை நேரத்தை A.M என்றும், மதியத்திற்கு பின்வரும் நேரத்தை P.M என்றும் சொல்கிறோம் இல்லையா... இது காலங்காலமாக வழக்கத்தில் உள்ளது. இந்த வழக்கம் எப்படி வந்தது என்று தெரியுமா பட்டூஸ்! MERIDIES (மெரிடிஸ்) என்பது லத்தீன் மொழி. இதற்கு 'நடுப்பகல்' என்று அர்த்தம். சூரியன் நடுப்பகலில் தான் உச்சிக்கு வரும். எனவே, நேரத்தை இதை வைத்து இரண்டாக பிரித்தனர். மேலும், லத்தீன் மொழியில் 'Ante' என்றால் முன்னால், 'Post' என்றால் பின்னால் என்று பொருள். அதனால், நடுப்பகலுக்கு முன் உள்ள முற்பகலை, 'Ante Meridies' என்றும், பிற்பகலை, 'Post Meridies' என்றும் வழங்கினர். இதையே A.M என்றும் P.M என்றும் சுருக்கமாக சொல்லி கொண்டிருக்கிறோம் குட்டீஸ்...
உங்ககிட்ட யாராவது கேட்டா, அழகா சொல்லிடுங்க குட்டீஸ்!
