
ஷூட்டிங் ஸ்டார்ஸ் என்பது மிகச் சிறந்த பொருட்கள். அது பூமியை நோக்கி வரும்போதே எரிந்து சாம்பலாகிவிடும்; பூமியின் வெளி மண்டலத்தின் நுழையும் போதே எரிந்துவிடும்.
ஒரு மணி நேரத்தில் பத்து, 'ஷுட்டிங் ஸ்டார்ஸ்கள்' தோன்றும். இது குண்டூசியின் தலைப்பகுதி அளவே இருக்கும். பெரிய திடப்பொருட்களை, 'மெட்டர்ஸ்' என்கிறோம். இத்தகைய விண்கற்கள் கூட வெளிமண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பலாகிவிடும். இவை முழுவதாக மறைவதில்லை. மிகப் பெரிய பொருட்கள் விண்ணிலிருந்து எப்போதாவது விழும். ஆனால், அப்படி பூமியில் விழும்போது இடி இடிப்பது போன்ற சத்தம் உண்டாகும்.
அமெரிக்காவில் 'அரிசோனா' மாவட்டத்தில் 'வின்ஸலோ' என்ற பகுதியில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரு விண்கல் விழுந்தது. இதனால், 1250 மீட்டர் நீளமும், 180 மீட்டர் அகலமும் உள்ள பள்ளம் உண்டானது. இதுவே மிகப் பெரிய, 'கிரெட்டர்' எனப்படும்.
ஷுட்டிங் ஸ்டார்ஸை, 'பாலிஸ ஸ்டார்ஸ்' என்றும் சொல்வோம். இவை, பல துண்டுகளாகி வெளிமண்டலத்தை அடையும்போது காற்றில் ஏற்படும் உராய்வு காரணமாக சூடாகிவிடுகிறது. இவை பூமியை அடைவதற்குள் எரிந்து சாம்பலாகிவிடும். விண்கற்களால் ஏற்படும் பள்ளங்கள் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளன.

