PUBLISHED ON : மார் 11, 2011

அ நிறம் | அளவு
ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து நடுவில் ஒரு நாணயத்தை வைக்கவும். இப்போது பாத்திரத்தின் விளிம்பில் இருந்து நாணயத்தைப் பார்க்கவும். நாணயம் தெரியும். இப்போது சற்று பின்னால் நகர்ந்து பார்த்தால் நாணயம் தெரியாது.
நீங்கள் அப்படியே இருங்கள். உங்கள் நண்பரிடம் பாத்திரத்தில் மெதுவாக, தண்ணீரை ஊற்றச் சொல்லுங்கள். நாணயம் மீண்டும் உங்களுக்கு தெரியும். இதற்கு காரணம் என்ன?
ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு ஊடுருவி செல்லும். அதாவது ஒளி காற்றிலிருந்து தண்ணீருக்கும் தண்ணீரிலிருந்து காற்றிற்கும் ஊடுருவி செல்லும். இந்த ஒளி அலைகள் நாணயத்தில் பட்டு வளைந்து தண்ணீர் வழியாக வெளியே வருகிறது. இந்த ஒளியை நீண்ட தூரம் பயணிக்க விடாமல், பாத்திரத்தின் விளிம்பு தடை செய்கிறது. எனவே, நாணயம் உங்களுக்கு தெரிகிறது.
