PUBLISHED ON : மார் 25, 2011

நீங்கள் விளையாடும் போது கீழே விழுந்தோ அல்லது வெட்டுக் காயம் ஏற்பட்டால், உடனே காயத்தை சுத்தமான பஞ்சால் சுத்தம் செய்து கிருமி நாசினியை தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்கு பிறகு கவனித்தால் வெண்மை கலந்த பழுப்பு நிற திரவம் வெளியேறும். இதை 'சீழ்' என்று அழைப்பர்.
காயம் பட்டவுடன் அந்த இடத்திலுள்ள மண் மற்றும் காற்றில் கலந்துள்ள பாக்டீரியா காயம் வழியாக, உடலுக்குள் செல்ல முயற்சிக்கிறது. அதே சமயம் நமது உடலில் இருந்து ரத்தம் வெளியேறுகிறது. அப்போது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பாக்டீரியாவை தாக்குகிறது. ஒருபுறம் காயம்பட்ட இடத்தில் ரத்த சிவப்பு அணுக்கள் உறைய ஆரம்பிக்கிறது. ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள் தொடர்ந்து பாக்டீரியாவை அழிக்கிறது. இறந்த பாக்டீரியாக்கள் இறந்த வெள்ளை அணுக்கள் பிளாஸ்மா மற்றும் காயம்பட்ட இடத்திலிருந்து திசுக்கள் அனைத்தும் சேர்ந்து 'சீழ்' ஆக உருவாகிறது.
சிலசமயம் சீழுடன் அதிக ரத்தமும் சேர்த்து காயம்பட்ட இடம் வீங்கி சிகப்பு நிறத்தில் காணப்படும். இதைத்தான் 'சீழ்க்கட்டி' விட்டது என்கிறோம்.
