
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
அத்திக்காய் - 200 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் துாள், மிளகாய்துாள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் சூடானதும், கிள்ளிய காய்ந்த மிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, துண்டாக்கிய அத்திக்காய் மற்றும் மஞ்சள் துாள் போட்டு வதக்கவும். பின், தண்ணீரில் வேக வைத்த பாசிபருப்பு, மிளகாய் துாள், உப்பு போட்டு கொதிக்க விடவும். கெட்டியானதும் இறக்கவும்!
சுவை மிக்க, 'அத்திக்காய் கூட்டு' தயார். பக்க உணவாக பயன்படுத்தலாம். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- பா.பழனிச்சாமி, அவிநாசி.
தொடர்புக்கு: 63832 89613