தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அவ்வையின் கண்ணீர்!

அவ்வையின் கண்ணீர்!

அவ்வையின் கண்ணீர்!


PUBLISHED ON : நவ 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி, புனித பிலோமினாள் பள்ளியில், 2012ல், 12ம் வகுப்பு படித்தேன்.

தமிழாசிரியையாக இருந்த மங்களமேரி, மொழி மீது மிகவும் ஆர்வமுள்ளவர். தமிழ் மொழியை சரியாக உச்சரிக்கவும், இலக்கண பிழையின்றி எழுதவும் கற்றுக்கொடுத்தார். மனம் கவரும் வகையில் போதிப்பார்.

அன்றைய வகுப்பில், பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து அவ்வையார் பாடலை நடத்தினார். அதியமான் மறைந்த போது அவ்வையார் பாடிய உணர்வு மிகுந்த பாடலை பாடி, தத்ரூபமாக நடித்தும் காண்பித்தார். உணர்ச்சி மேலீட்டால், வகுப்பறையே கண்ணீரில் ஆழ்ந்தது.

அவரது அயராத பயிற்சியால், தமிழில் பிழையின்றி எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டேன். தமிழ் மொழியில் கையொப்பம் இடுவதை வழக்கமாக்கினேன்.

என் வயது, 30. தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படிப்பதையும், சிறுகதை எழுதுவதையும் வழக்கமாக வைத்துள்ளேன். இதற்கு அடிப்படை அமைத்து தந்த தமிழாசிரியை மங்களமேரியை நன்றியுடன் நினைவில் பதித்துள்ளேன்.



- ரவீண் சிபியா ஜோசப், திண்டுக்கல்.

தொடர்புக்கு: 97894 29211


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us