தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உதவிக்கு கை கொடுப்போம்!

உதவிக்கு கை கொடுப்போம்!

உதவிக்கு கை கொடுப்போம்!


PUBLISHED ON : நவ 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரம், கைலாசம் நினைவு நடுநிலைப் பள்ளியில், 1966ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...

என் ஊரிலிருந்து, 2 கி.மீ., துாரத்தில் இருந்த பள்ளிக்கு நடந்தே சென்று வருவேன். வீட்டில், மாடி ஏணிப்படியில் தவறி விழுந்ததால், இடது காலில் அடிபட்டு வீங்கியிருந்தது. அன்று கணக்கு டெஸ்ட் இருந்ததால், லீவு போட முடியாது. வலியைத் தாங்கி நொண்டியவாறே, பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன்.

தற்செயலாக திரும்பியபோது, தமிழாசிரியர் சமுத்திரபாண்டி சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தயங்கியபடி கையை நீட்டி மறித்தேன். சைக்கிளை நிறுத்தியவரிடம், நடக்க இயலாத என் நிலையை சொன்னேன். அன்புடன், சைக்கிள் கேரியரில் என்னை அமர வைத்து, பள்ளிக்கு அழைத்து சென்றார். அவரது மனித நேய செயல்பாடு கவர்ந்ததால், அந்த நேரத்தில் தெய்வமாகவே தோன்றினார்.

அவசியத் தேவைக்காக, 'லிப்ட்' கேட்டதை வகுப்பில் பாராட்டினார் தமிழாசிரியர். உதவி கேட்பதையும், உதவுவதையும் ஒரு பாடமாக போதித்தார்.

கல்லுாரி படிப்பை முடித்ததும், மற்றவர்களுக்கு உதவுவதற்காக தனிப்பயிற்சி மையம் நடத்தினேன். மாணவர்களிடம் என் அனுபவத்தை சொல்லி, தேவையில்லாத கூச்சம், தயக்கம், பயம் இல்லாமல் செயல்பட அறிவுரை கூறுவதை வழக்கமாக்கினேன்.

தற்போது என் வயது, 70. வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறேன். உலக அமைதிக்காக தினமும் ஒரு நிமிடம் பிரார்த்தனை என்பதை வலியுறுத்தி, பேரன்பு என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். இது போன்ற செயல்களை துாண்டிய தமிழாசிரியர் சமுத்திரபாண்டியை, நன்றியுடன் நினைத்து போற்றுகிறேன்.

- நெல்லை குரலோன், தென்காசி. தொடர்புக்கு: 97916 67528

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us