PUBLISHED ON : மே 03, 2025

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 8
சர்க்கரை - 1 கப்
சோள மாவு - 50 கிராம்
நெய், பாதாம், முந்திரில தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
வாழைப்பழத்தை தோல் நீக்கி அரைக்கவும். கடாயில் நெய் சூடானதும் அரைத்த வாழைப்பழத்தை போட்டு கிளறவும். பின், சோள மாவை தண்ணீருடன் சேர்த்து கரைசலாக்கி ஊற்றவும். அதனுடன் சிறிது நெய் ஊற்றி, அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும். நெய்யில் வறுத்த பாதாம் முந்திரியை பொடியாக நறுக்கி அதில் போடவும்.
சுவைமிக்க, 'வாழைப்பழ அல்வா!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- தே.சந்தியா, விருதுநகர்.
தொடர்புக்கு: 89256 07346
