
என் வயது 65; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை, 25 ஆண்டுகளாக படித்து வருகிறேன். இதழை கையில் எடுத்தவுடன் பள்ளி பருவத்தை நினைவூட்டி மகிழ்ச்சி தருகின்றன, 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள். மழலையர் கைவண்ணத்தில் மிளிரும், 'உங்கள் பக்கம்' ஓவியங்கள், அறிவியலை அழகுற தரும் அங்குராசுவின் கட்டுரைகள், சுவை உணவு படைக்கும், 'மம்மீஸ் ெஹல்த் கிச்சன்' என, அனைத்தும் ஆர்வமூட்டுகின்றன.
எல்லா வயதினருக்கும் ஆலோசனை கூறும், 'இளஸ் மனஸ்' பகுதியில் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது; வாழ்வில் வெற்றி நடைபோடுவதற்கு வழிகாட்டுகிறது.
அறிவு பெட்டகமாக விளங்கும், சிறுவர்மலர் இதழை வாசிக்கும் லட்சக் கணக்கான வாசகியரில் நானும் இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி படிக்கும் ஒரே இதழ் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வாழ்க சிறுவர்மலர் இதழ்; வளர்க அதன் சிறப்பான தொண்டு.
- ஜி.கண்ணாத்தாள், அருப்புக்கோட்டை.
தொடர்புக்கு: 63690 60233