
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாறை வகையை சேர்ந்தது கூழாங்கல். கனிமங்கள் சேர்க்கையால் இயற்கையாகவே உருவாகிறது. பல வடிவம், வண்ணங்களில் வழுவழுப்பாக இருக்கும். இதில் உருவாக்கப்பட்ட கருவிகள், பழைய கற்கால நாகரிகத்தில் பயன்பாட்டன.
கால் பாதங்களுக்கு கூழாங்கல் மீதான நடைபயிற்சி, புத்துணர்வை தரும். நரம்புப் புள்ளிகள், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட உறுப்புகள் துாண்டப்படும்; இதனால், உடல் செயல்பாடு சீராகி, ஆரோக்கியம் மேம்படும்.
மத்திய கிழக்கில் பஹரைன், வட அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடான நியூசிலாந்து பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது. புதர் மறைவில் கூழாங்கற்களை சேகரித்து, அதன் மீது சருகு, காய்ந்த புற்களால் கூடு அமைக்கும் மஞ்சள் மூக்கு ஆள்காட்டிப்பறவை.
- நர்மதா விஜயன்