
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 200 கிராம்
தேங்காய் துருவல் - 2 கப்
எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரியை, 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக அரைக்கவும். அதனுடன், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கலக்கவும். தோசை கல் சூடானதும், மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
சுவை மிக்க, 'தேங்காய் தோசை!' தயார். மிளகாய் பொடி தொட்டு சாப்பிட்டால் அபாரமாக இருக்கும்!
- டி.நரசிம்மராஜ், மதுரை.
தொடர்புக்கு: 95662 63629