
வயது முதிரும் போது, இரவில் துாக்கம் குறையும். உடலும் மனமும் பாதிக்கப்படும். திடீரென படுக்கையிலிருந்து எழுந்தால் தடுமாற்றம் ஏற்படும். இதனால், உடல் பாதிக்கும் நிலை ஏற்படலாம்.
இதை தவிர்ப்பது பற்றி பார்ப்போம்...
இரவில் படுக்கைக்கு செல்லும் முன், திரவ உணவுகள் எடுக்க வேண்டாம். முதிய வயதில் பகல் வெளிச்சத்தில் இருக்க நேர்ந்தால், உடலில் 'மெலடோனின்' அதிக அளவில் சுரக்கும். இது, துாங்குவதற்கு துாண்டும். ஆனால், பகலில், 30 நிமிடம் மட்டும் துாங்கினால் போதும்.
இரவில் படுக்கைக்கு செல்லும் முன், உடலை ஓய்வாக வைத்திருக்க வேண்டும். இதமான வெந்நீரில் குளிக்கலாம். எளிய யோகாசனம் செய்யலாம். இரவு, 7:00 மணிக்குள் மிதமான உடற்பயிற்சி செய்யலாம். நடைப்பயிற்சியும், தோட்ட வேலையும் செய்வது சிறப்பு.
அலைபேசி, லேப்டாப் போன்ற தொடர்பு சாதனங்களை தள்ளி வைக்க வேண்டும். முதுமை பருவத்தில், நாளொன்றுக்கு, ஐந்து மணி நேர துாக்கம் போதுமானது. ஆனால், தொந்தரவற்ற ஆழ்ந்த துாக்கம் அவசியம்.
- கோவீ.ராஜேந்திரன்