
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேங்காய் பூ, இப்போது சந்தையில் அதிகம் கிடைக்கிறது. இதில் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் சத்துகள் அதிகம் உள்ளன. இதை உண்பதால் செரிமான கோளாறுகள் சரியாகும். ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ளன. முதுமை தோற்றத்தை தடுக்கும். வயது முதிர்வால் ஏற்படும் தோல் சுருக்கம் போன்ற பிரச்னைகள் வராமல் காக்கும்.
தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்கு, நிவாரணம் தரும். இதிலிருக்கும் சத்துக்கள், தைராய்டு சுரப்பை குணப்படுத்தும். தேங்காய் பூவில், கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைய உதவுகிறது. மாதவிடாய் கோளாறையும் குணப்படுத்தும். இதயக் குழாய்களில் படியும் கொழுப்பை நீக்கும். உடலில் நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும். இன்சுலின் சுரப்பை துாண்டி ரத்தத்தில், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்