
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடலில், சிறுநீரக உறுப்பை காக்க கூடியது கோவைக்காய். பெருங்குடல் மற்றும் செரிமான உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேற்றும். கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.
கோவைக்காயில் இரும்பு, பொட்டாஷியம் சத்துக்கள் அதிகம். எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம், நரம்புகள் சீரான இயக்கத்திற்கு உதவும். இதய நோய் வராமல் தடுக்கிறது.
கோவைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். சிறுநீரில் சர்க்கரை சத்து வெளியேறுவதை தடுக்கும்.
செரிமான அமிலங்கள் குறைந்தால், மலச்சிக்கல் போன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. கோவைக்காயை பொரியல் செய்து சாப்பிட்டால், செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். உடல் எடையும் குறையும்.
- ரா.அருண்குமார்