
பீட்ரூட் கிழங்கு, கார்போைஹட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, சோடியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், வைட்டமின் சி,பீட்டெய்ன், போலேட், மாவு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில், மிகக்குறைந்த அளவு கலோரி தான் உள்ளது.
ரத்தத்தில் கழிவுகளை நீக்கி, உடலுக்கு குளிர்ச்சியை தர வல்லது. கண் பார்வை திறனை அதிகரிக்க உதவும். செரிமான கோளாறை நீக்கும். ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும். பீட்ரூட் மற்றும் வெள்ளரிச்சாறை கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகம், பித்தப்பை சுத்திகரிக்கப்படும்.
முகப்பொலிவை கூட்டும். சிறுநீரக எரிச்சலையும் குறைக்கும். பீட்ரூட் சாறுடன், தேன் கலந்தும் சாப்பிடலாம். உடல் சோர்வு, மன அழுத்தத்தை குறைத்து, புத்துணர்ச்சியை அளிக்கும். குளிர்காலத்தில் அதிகமாக பீட்ரூட் எடுத்துக் கொள்ளலாம்!
- வி.கவுதம சித்தார்த்