
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் - 10
தேங்காய் துருவல் - 0.5 கப்
காய்ந்த
மிளகாய் - 5
கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்துாள், கறிவேப்பிலை, உப்பு
- சிறிதளவு
புளி, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
நெல்லிக்காயை விதை நீக்கி, சிறு துண்டுகளாக்கவும். வாணலி சூடானதும் துருவிய தேங்காய், கடுகு, உளுந்தம் பருப்பை வறுக்கவும். இவற்றுடன் உப்பு, புளி, பெருங்காயதுாள் போட்டு அரைக்கவும்.
சத்து மிக்க, 'நெல்லிக்காய் சட்னி' தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அமோகமாக இருக்கும்.
- ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
தொடர்புக்கு: 99940 16314