
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் துருவல் - 1 கப்
சோள மாவு, கோதுமை மாவு,
அரிசி மாவு - 2 கப்
பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு - தலா 0.5 கப்
தயிர்,
உப்பு, மிளகாய் - சிறிதளவு
எள், எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
சோ ளம், கோதுமை, கடலை, பொட்டுக்கடலை, அரிசி மாவுகளுடன் தயிர், உப்பு, அரைத்த மிளகாய், வெள்ளரிக்காய் துருவல், எள், எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். அதை சிறிய உருண்டைகளாக பிடித்து பூரியாக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவைமிக்க, 'வெள்ளரிக்காய் பூரி!' தயார். மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏற்றது.
- நா.நிலவரசி, திருப்பூர்.

