sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

இளஸ் மனஸ்! (298)

/

இளஸ் மனஸ்! (298)

இளஸ் மனஸ்! (298)

இளஸ் மனஸ்! (298)


PUBLISHED ON : ஏப் 19, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 19, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா...

என் மகளுக்கு வயது, 10; தனியார் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறாள். இரவில், என் பக்கத்தில் தான் படுத்திருப்பாள். துாங்கும் போது, கடைவாயோரம் எச்சில் ஒழுகி, முழு தலையணையும் நனைந்திருக்கும். சமயங்களில், தலையணைக்கு அருகில் எச்சில் தேங்கியிருக்கும்.

காலையில் எழும்போது மகளுக்கு, உதட்டு சுழிப்பில் கொடுவாய் ஓடி இருக்கும். இந்த பிரச்னையை நிரந்தரமாக போக்க என்ன செய்ய வேண்டும். சரியான வழிகாட்ட வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

என்.சுகுணா தேவி.



அன்பு சகோதரிக்கு...

துாக்கத்தில் எச்சில் ஒழுகுவதை ஆங்கிலத்தில், 'ட்ரூலிங்' என்பர். அதை, ைஹ பர்சலைவேஷன், சியாலோரியா எனவும் அழைப்பர். உன் மகள் படுக்கையில் எந்த நிலையில் துாங்குகிறாள் என்பதை நன்கு கவனிக்கவும். இடது, வலது கைகள் மீதோ, வயிற்றின் மீதோ படுத்திருந்தால் புவிஈர்ப்பு விசையின் விளைவால் எச்சிலை இழுக்கும். மல்லாக்கப் படுத்திருப்பது பாதுகாப்பனது.

உன் மகளுக்கு...

* ஜலதோஷம், தொண்டை அழற்சி, காற்றுப்புரை சார்ந்த ஒவ்வாமை பிரச்னைகள் இருக்க கூடும். அதனால், வாய் வழி சுவாசிப்பாள். துாசி, மகரந்தத்துாள், காளான், பூஞ்சணம் இவற்றிலிருந்து பாதுகாக்க தேவையான ஆலோசனை பெற வேண்டும்

* ஒழுங்காக பல் துலக்குகிறாளா என்பதை கவனிக்கவும். வாய் தொற்று, உமிழ் நீர் சுரப்பி பிரச்னைகள், இரைப்பை அமிலம் வாய்க்கு எதுக்கலிக்கும் ஜெர்ட் பிரச்னை இவற்றில் ஏதாவது ஒன்று உன் மகளுக்கு இருக்கலாம்

* குறட்டை விடுகிறாளா என்பதையும் கவனிக்கவும்

* வைட்டமின் பி - 12 குறைபாடு, அரோமேட்டிக் எல் அமினோ ஆசிட் டிகார்போஜைலேஸ் என்ற, ஏ.ஏ.டி.சி., குறைபாடு இருக்கலாம்.

மனித உடலில், 'டான்சில்' மிகப்பெரிய நிணநீர் சுரப்பிகளில் ஒன்று. டான்சில் வீக்கம் கூட, எச்சில் ஒழுகுவதை அதிகப்படுத்த வாய்ப்பு உண்டு.

உன் மகள், 'பபிள்காம்' மெல்வாளா என்பதை நன்கு கவனிக்கவும்.

மெல்கிறாள் என்றால் அதை சீராக குறைத்து முற்றிலும் தடுக்கவும்.

அவளை முதலில் ஒரு பல் மருத்துவரிடம் அழைத்து போகவும். வாய் சுத்தம் பற்றிய அறிவுரையுடன், பற்களை நன்கு சுத்தம் செய்து விடுவர். அடுத்து காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவரிடம் அழைத்து போகவும். அவள் துாங்கும் விதத்தை வீடியோவில் பதிவு செய்து மருத்துவரிடம் காட்டவும். பிரச்னைகளை மருத்துவர் புரிந்து கொள்ள இது உதவும். தொண்டை, மூக்கு சார்ந்த நோய் தொற்று எதாவது உன் மகளுக்கு உள்ளதா என மருத்துவர் சோதித்து அறியவும் உதவும்.

தொடர்ச்சியான நேர்மறை காற்றுப்பாதை அழுத்தம் என்பது துாக்கத்தில் மூச்சுத்திணறலை நிர்வகிக்கப் பயன்படும் ஒருவித சிகிச்சை முறை. தேவைப்பட்டால் இச்சிகிச்சையை உன் மகளுக்கு மேற்கொள்வார்.

மருத்துவர் ஆலோசனையுடன், பேச்சு மொழி தெரபிஸ்ட்டிடம் அழைத்து செல்லவும். வாய் தசைகளை கட்டுக்குள் வைக்கவும், உமிழ்நீரை தேவைக்கு சுரக்க வைக்கும் உத்திகளையும் மேம்படுத்த கற்றுத்தருவார் பேச்சு தெரபிஸ்ட். உதடுகளை சரிவர மூடுவதற்கும், உமிழ்நீரை தேவைக்கேற்ப விழுங்கவும் தக்க பயிற்சிகள் தருவார்.

எச்சில் ஒழுகுதல் என்ற குறைபாடு எல்லா வயதினருக்கும் உண்டு. சரியாக கவனித்தால் எளிதாக இந்த பிரச்னையை சரி செய்து விடலாம்.

உன் மகளை சுத்தமான காற்றோட்டம் நிறைந்த அறையில் துாங்க செய்யவும். உணவில், இஞ்சி, பப்பாளி சாறு, கருந்திராட்சை சாறு, கற்பூரவல்லி மூலிகை தேநீர், குதிரை முள்ளங்கி போன்றவற்றை அதிகம் சேர்த்தால் நலம் கிடைக்கும். மகளின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். நம்பிக்கையுடன் செயல்படு.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.






      Dinamalar
      Follow us