தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இந்திய மிளகாய்கள்!

இந்திய மிளகாய்கள்!

இந்திய மிளகாய்கள்!


PUBLISHED ON : நவ 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய உணவு வகைகளில் தனித்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது மிளகாய். சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகிறது.

காஷ்மீர் மிளகாய் முதல் நறுமணம் தரும் பைடகி மிளகாய் வரை, இதன் பலதரப்பட்ட வகைகள் குறித்து பார்க்கலாம்...

காஷ்மீரி: காஷ்மீர் பகுதியில் விளைகிறது இந்த மிளகாய். அடர் சிவப்பு நிறத்தில் ரோகன் ஜோஷ் மற்றும் தந்துாரி சிக்கன் போன்ற உணவுகளில் பயன்படுகிறது. இந்த மிளகாய் துாள், இந்தியா முழுதும் சமையலறைகளில் பிரதானமாக இடம்பெற்று உள்ளது.

பைடகி: கர்நாடகாவில் விளையும் பிரபலமான மிளகாய், பைடகி. அடர் சிவப்பு நிறத்தில் உள்ளது. இது காரத்தன்மை மற்றும் நறுமணத்திறகாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சாம்பார், ரசம், சட்னி போன்ற உணவுகள் தயாரிக்க பயன்படுகிறது.

குண்டூர் மிளகாய்: ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியில் விளைகிறது. இந்தியாவின் தென் மாநில உணவுகளில் முக்கிய சுவையூட்டியாக இருக்கிறது. ஆந்திர உணவுகளான கறி, ஊறுகாய், சட்னி தயாரிக்க பயன்படுகிறது.

காந்தாரி: பறவையின் கண் வடிவில் சிறிதாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கும் கேரளா, கர்நாடகா பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் நிறம் மற்றும் காரத்தன்மையால், ஊறுகாய் மற்றும் பல்வேறு உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. கேரள உணவில் சட்னி, மசாலாப் பொருட்களில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

தானி மிளகாய்: வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் விளைகிறது. பச்சை மிளகாய் என்றும் அழைக்கப்படுகிறது. பஜ்ஜி செய்ய பயன்படுகிறது. சமையலில் பரவலாக பயன்படுகிறது.

சங்கேஷ்வரி: கர்நாடகா மாநிலம் சங்கேஷ்வர் பகுதியில் விளைகிறது. இறைச்சி உணவுகளில் அதிகம் பயன்படுகிறது. மசாலாப் பொருட்களில் உலர் பொடியாக பயன்படுத்தப்படுகிறது.

கோஸ்ட் மிளகு: மிகவும் காரமான மிளகாய்களில் ஒன்று. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், நகாலாந்து, மணிப்பூர் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஊறுகாய், சட்னி, காரமான சாஸ் தயாரிக்க பயன்படுகிறது.

- வி.பரணிதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us