
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீபாவளியன்று வித விதமான வண்ணங்களில் மத்தாப்பு ஒளிர்வதை கண்டு வியப்போம். இதற்கு காரணம் சில உலோக உப்புகள். பேரியம் உப்பு தடவப்பட்ட மத்தாப்பு, பளிச்சென்று பச்சை வண்ணத்தை உமிழும். ஸ்ட்ரான்ஷியம் உப்பு தடவப்பட்டிருந்தால் சிவப்பு நிறத்தில் எரியும். தாமிர உப்பு என்றால் நீல நிறத்தில் ஜ்வாலை இருக்கும். சோடியம் உப்பு, மஞ்சள் நிறத்தில் எரியும்.
வண்ணமயமான கோலத்தை, ஹிந்தி மொழியில், 'ரங்கோலி' என்பர். ராஜஸ்தானியர், 'மதானே' என்பர். மேற்க வங்கத்தில், 'அல்பனா' என அழைப்பர். பீகாரில், 'அரிப்பனா' என்பர்.
உத்தரபிரதேசத்தில், 'சவுக் பூஜன்' எனப்படுகிறது. உத்தரகாண்டில், 'எய்பன்' என கூறப்படுகிறது.
செயற்கை வண்ணங்கள் உடைய இனிப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. இவற்றால் உடலுக்கு கெடுதல் உண்டாகும். இயற்கை வண்ணங்களால் பூமியை பசுமையாக்கி, தீபாவளி கொண்டாடி மகிழ்வோம்.