PUBLISHED ON : மே 16, 2026

தி ண்டுக்கல், செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 10ம் வகுப்பு படித்தேன். கணக்குப் பாடத்தில், முதல் மாத பரீட்சையில் குறைந்த மதிப்பெண் பெற்றேன். என் தந்தை, வீட்டிற்கு அருகில் இருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை, எனக்கு டியூஷன் எடுக்க ஏற்பாடு செய்தார்.
அவர், தினமும் காலையில், 6:00 மணிக்கே வீட்டிற்கு வந்து, எனக்கு டியூஷன் எடுத்தார். முதலில் சிரமமாக இருந்தாலும், பின் ஆர்வம் ஏற்பட்டு, சந்தேகம் கேட்டு பயிற்சி பெற்றேன். அவரும், பொறுமையாக என் சந்தேகங்களை எல்லாம் தீர்த்து வைத்தார். எனக்கு கணக்கு பாடத்தின் அடிப்படை புரிந்தது; கணக்கு கைவசப்பட்டது.
அவருடைய முயற்சியால் கணக்கு பாடத்தில், 93 சதவீத மதிப்பெண் பெற்றேன். இதன் பயனாக, மதுரை, பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்ந்து, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றேன்.
மின்வாரியத்தில், 1979ல் பணியில் சேர்ந்தேன். பின், பகுதிநேர பி.இ., முடித்து, உதவி பொறியாளராகவும், செயற்பொறியாளராகவும் பதவி உயர்வு பெற்று, 2015ல் ஓய்வு பெற்றேன்.
தற்போது என் வயது, 68. கணக்கு பாடத்தின் அடிப்படையை புரிய வைத்து, மின்வாரிய செயற்பொறியாளர் பதவி வரை உயர்வதற்கு காரணமாக இருந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை, என் வாழ்க்கையில் என்றுமே மறக்க மாட்டேன்.
- என்.பாஸ்கரன், மதுரை. தொடர்புக்கு: 94433 04568
