
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1 பச்சை மிளகாய் - 2பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், இஞ்சி - சிறிதளவுஉப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் சூாடனதும் சுத்தம் செய்த வாழைப்பூ, துண்டாக்கிய பச்சை மிளகாய், துருவிய தேங்காய், நறுக்கிய இஞ்சியை வறுக்கவும். ஆறியதும் தண்ணீர், உப்பு சேர்த்து அரைக்கவும்.
சுவை மிக்க, 'வாழைப்பூ சட்னி' தாயர். சத்துக்கள் நிறைந்தது. சோசை, இட்லியுடன் பக்க உணவாக பயன்படுத்தலாம். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.
- எம்.நிர்மலா, புதுச்சேரி.