PUBLISHED ON : செப் 07, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்!
மணத்தக்காளி கீரை - 2 கப்
உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கொத்தமல்லி விதை - தலா 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை, புளி கரைசல், நல்லெண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கொத்தமல்லி விதை மற்றும் காய்ந்த மிளகாயை வறுக்கவும். இவற்றை, உப்பு, புளி கரைசல், கறிவேப்பிலை, நல்லெண்ணெயில் வதக்கிய மணத்தக்காளி கீரையுடன், தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
சுவை மிக்க, மணத்தக்காளி கீரை சட்னி தயார். சூடான சாதம், இட்லி, தோசைக்கு பக்க உணவாக பயன்படுத்தலாம். அஜீரணம், சளி தொல்லையை போக்கும்.
- கனகம் பொன்னுசாமி, கோவை