PUBLISHED ON : ஏப் 18, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை - அரை கட்டு
தேங்காய் பால் - 1 கப்
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 3 பல்
எண்ணெய், மிளகு - சிறிதளவு
உப்பு -
தேவையான அளவு.
செய்முறை:
சுத்தம் செய்த கீரை, சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, கீரையை சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து, ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
பின், இந்த சாறில், மிளகுத்துாள், தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.
மணத்தக்காளி சூப், வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரின் உடல் நலத்துக்கும் உகந்தது.
- ம.வித்யா, கோவை.
