
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்று, மதுபானி என்ற மிதிலா ஓவியம். பீகார் மாநிலத்தில் பெண்களின் பாரம்பரிய அறிவில் உருவாகியது. ராமாயணம் தோன்றிய காலத்தில் மன்னர் ஜனகர், மகள் சீதை திருமண நிகழ்வை ஓவியமாக தீட்ட கூற, புதுமையாக உருவாக்கப்பட்டது.
பழங்காலத்தில் கரித்துண்டு துணையால் வரைந்தனர். பின், இலை, வேர், பூக்களில் இயற்கை வண்ணங்களை தயாரித்து உருவாக்கினர். பின், இந்த மதுபானி ஓவியக்கலை இருந்த இடம் தெரியாமல் போனது.
நிலநடுக்கத்தால் பீகார் 1934ல் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்ய ஆங்கிலேய அதிகாரி வில்லியம் ஆர்ச்சர் சென்றார். அப்போது, இடிந்த பழைய கட்டடங்களில் மதுபானி ஓவியக் கலை இருப்பதை கண்டுபிடித்தார். அப்பகுதியில் வசித்த முதியோர்களிடம் இருந்து கற்று மதுபானி ஓவிய நுணுக்கங்களை மீட்டார். இக்கலையை உயிர்த்தெழச் செய்தனர் கலைஞர்கள்.
- விஜயன் செல்வராஜ்