தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மூடிகள் பலவிதம்!

மூடிகள் பலவிதம்!

மூடிகள் பலவிதம்!


PUBLISHED ON : ஜன 31, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாட்டில் மூடிகளின் கதை, மனித நாகரிகத்தின் பரிணாமத்தைப் போல, சுவாரஸ்யமானது.

ஆரம்பத்தில் மண்பாண்டங்கள், மரப்பெட்டிகள், தோல் பைகளில் திரவங்களைச் சேமித்த மனிதர்கள், பாட்டில்கள் வந்த பின், மூடிகளைத் தேடினர்.

முதலில், 17ம் நுாற்றாண்டில், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில், கார்க் மரத்தின் பட்டையால், ஒயின் பாட்டில்களுக்கு கார்க் மூடிகள் தயாரித்து பயன்படுத்தப்பட்டன. கார்க் மரத்தில், 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பட்டை எடுக்க முடியும்.

இயற்கையான பொருளாக இருந்த இவை, 19ம் நுாற்றாண்டில், இயந்திர உற்பத்திக்கு மாறி, இப்போது செயற்கை கார்க்காகவும் தயாரிக்கப் படுகின்றன. ஒயின் பாட்டிலைத் திறக்கும் போது கேட்கும், 'பாப்' சத்தம், கார்க் மூடியின் மாயம் தான்.

அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் பெயின்டர், 1892ல், பால்டிமோரில், 'கிரவுன் கேப்'பை, காப்புரிமை பெற்று உருவாக்கினார். உலோகத்தால் செய்யப்பட்டு, உள்ளே கார்க் பொருத்தப்பட்ட இவை, பின்னர் பிளாஸ்டிக் பூச்சுடன் மறுசுழற்சி வடிவத்துக்கு மாறின. கிரவுன் கேப்பின் 21 பற்கள், இறுக்கத்துக்கு உதவுகின்றன.

இந்த மூடியைத் திறப்பதற்கு, 'பாட்டில் ஓப்பனர்' தேவைப்பட்டாலும், சிலர் பற்களால் திறந்தனர். இன்று, பாட்டில் குளிர்பானங்களில் இது பிரபலம்.

தொடர்ந்து, 20ம் நுாற்றாண்டின் மத்தியில், 'ஸ்க்ரூ' மூடி பரவலானது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில், இது ஒயின் பாட்டில்களை பிரபலப்படுத்தியது. ஆஸ்திரேலிய ஒயின் பாட்டில்கள் தயாரிப்பில், இப்போது 90 சதவீதம் இதைப் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்காவின் குளிர்பான நிறுவனங்களால், 1960களில், பிளாஸ்டிக் மூடிகள் புழக்கத்துக்கு வந்தன. ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் மூடிகள் உற்பத்தியாகி, பாதி மட்டுமே மறுசுழற்சியாகின்றன.

அமெரிக்காவில், ஜாம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுக்கு, 20ம் நுாற்றாண்டு துவக்கத்தில் 'லக் கேப்' வந்தது. இது, உலோகத்தால் செய்யப்பட்டு, ரப்பர் சீலுடன், பாட்டிலுக்குள் காற்றை வெளியேற்றி வெற்றிட மூடுதலுக்கு உதவுகிறது.

அடுத்த முறை பாட்டிலைத் திறக்கும்போது, அவற்றின் மூடிகளின் கதையை நினைத்துப் பாருங்கள்.

-- நர்மதா விஜயன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us