
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணம், ருசி மிக்க சின்ன வெங்காயத்தில், புரதம், சுண்ணாம்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளன. பொட்டாஷியமும், ரிபோபிளேவின் சத்தும் நிறைந்துள்ளன.
இதை பச்சையாகவும் உண்ணலாம். வாயில் போட்டு சுவைத்தால் கிருமிகள் மடிந்து விடும். கெட்டக்கொழுப்பை கரைக்கும். தடுமன், இளைப்பு, வாதம், பித்தக் கிறுகிறுப்பு, ஈரல் கோளாறு போன்ற உபாதைகளை குணப்படுத்தும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
ரத்தம் உறைதல் மற்றும் அடைப்பை நீக்கி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மண்ணீரல் கோளாறுகளை அகற்றும். சளியை கரைத்து வெளியேற்றும். பல் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும்.
- டாக்டர் ரா.அருண்குமார்