PUBLISHED ON : செப் 21, 2024

என் வயது, 20; பெங்களூரு, பிரசிடென்சி பல்கலையில் பொறியியல், செயற்கை நுண்ணறிவு பிரிவில் இளங்கலை 2ம் ஆண்டு படிக்கிறேன். பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே, 'சிறுவர்மலர்!' இதழை ஒவ்வொரு வாரமும் தவறாமல் படித்து வருகிறேன். அழகிய ஓவியத்துடன் கூடிய தொடர்கதையை மிகவும் விரும்புவேன்.
சிறுவர்மலர் இதழில் வெளியாகும் புதிர் போட்டி மூளைக்கு பயிற்சி அளிக்கும் விதமாக உள்ளது. பள்ளி வாழ்க்கையில் கிடைத்த பசுமையான நிகழ்வுகளை, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் படிக்கும் போது, நினைவு பூக்கள் மலர்கின்றன. மாணவ, மாணவியர் கைவண்ணத்தால், 'உங்கள் பக்கம்!' ஜொலிக்கிறது.
எனக்கு கிடைத்த வரப் பிரசாதமாக, 'மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன்!' பகுதியை எண்ணுகிறேன். புதிய வழிகாட்டுதல்களை அறிந்து கொள்ள 'இளஸ்... மனஸ்...' உதவுகிறது. எனக்கு குருவாக விளங்கி வருகிறது, சிறுவர்மலர் இதழ். அதன் சேவை என்றென்றும் தொடர வாழ்த்துகிறேன்!
- ர.லக்சன்யா, பெங்களூரு.