
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பலாக்காய் - -1பூண்டு -பல் - 3 சீரகம்-, உளுந்தம்
பருப்பு, கடலைப் பருப்பு, மஞ்சள் துாள் - சிறிதளவுஉப்பு, தேங்காய் எண்ணெய்,
தேங்காய் துருவல், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பலாக்காயை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி, உப்பு, மஞ்சள் துாள், தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதனுடன் துருவிய தேங்காய், பூண்டு பல், சீரகத்தை அரைத்து கலக்கவும். தேங்காய் எண்ணெயில் உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து அதில் கொட்டவும்.
சுவைமிக்க, 'பலாக்காய் பொரியல்!' தயார். சாதத்துடன் பக்க உணவாக பயன்படுத்தலாம். அனைவரும் விரும்பி உண்பர்.
- பே.ராமலட்சுமி, விருதுநகர்.