sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

பனி விழும் திகில் வனம்! (17)

/

பனி விழும் திகில் வனம்! (17)

பனி விழும் திகில் வனம்! (17)

பனி விழும் திகில் வனம்! (17)


PUBLISHED ON : மே 17, 2025

Google News

PUBLISHED ON : மே 17, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா, துணிவுள்ள சிறுமி. இமயமலையில் ஏறிய அவளது தந்தை துருவ் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. அதை ஏற்க மறுத்த மிஷ்கா, அமைச்சக அதிகாரியிடம் கடுமையாக வாதிட்டாள். தந்தையை கண்டுபிடிக்க இமயமலைக்கு நம்பிக்கையுடன் புறப்பட்டாள். இனி -

தனி விமானத்திலிருந்து மிடுக்காய் இறங்கினாள் மிஷ்கா.

அவள் பயணத் திட்டத்துக்கு ஸ்பான்சர் செய்யும் கோடீஸ்வரர் நியமித்த உதவியாளர் கோபால், அவளது வலதுகை பக்கம் நின்றிருந்தார்.

கோபாலுக்கு, 40 வயதிருக்கும். தமிழ் சினிமா சிரிப்பு நடிகர் நாகேஷ் போல உடல்வாகு. தலையில் பனிக்குல்லாயை இழுத்து விட்டுக் கொண்டார்.

''ஆஹா... என்ன குளிர்... என்ன குளிர்...''

முனகினார் கோபால்.

மீடியாக்கள், மிஷ்காவை சுற்றி சூழ்ந்தன.

'நீங்கள் எவரெஸ்ட் வீரர் துருவ்வின் மகள் மிஷ்கா தானே...' என்றனர் நிருபர்கள்.

''ஆமாம்...'' என்றாள் மிஷ்கா.

'என்ன விஷயமா லுக்லா வந்துருக்கிறீங்க...'

''என் தந்தை காணாமல் போய், ஐந்து நாட்கள் ஆகின்றன. அவரை உயிருடன் மீட்டு செல்ல வந்திருக்கிறேன்...''

'வீட்டுக்காவலில் இருந்த நீங்கள் எப்படி தப்பி வந்தீர்...'

''ரகசியத்தை உங்களிடம் சொல்ல இயலாது...''

'நீங்கள் எவரெஸ்ட் மலையேறுவதற்கு இந்திய அரசும், ஹிமாலயன் மலையேறும் கூட்டமைப்பு தடை விதித்துள்ளதே...'

''தடையை மீறுவேன்...''

'18 வயதுக்கு குறைந்தோர் எவரெஸ்ட் ஏறக்கூடாது என விதிகள் உள்ளனவே...'

''நான் சொல்வதை குறித்துக் கொள்ளுங்கள். ஐரோப்பாவின் எல்ப்ரஸ் சிகரத்தின் உச்சியை தொட்டார், 13 வயது சிறுமி மலாவத் பூர்ணா...''

'நிறைய குறிப்புகள் வைத்திருக்கிறீர் போல...'

''இதே மலாவத் பூர்ணா எவரெஸ்ட் உச்சியிலும் ஏறி சாதனை படைத்துள்ளார். விதிகள் இருந்தால், அதற்கு விலக்குகள் இருப்பதும் தானே முறை...''

'உங்கள் உயரம் என்ன...'

''என் உயரம் 135 செ.மீ., ''

'எடை...'

''32 கிலோ...''

'உங்கள் உடல் தகுதி என்ன...'

''எனக்கு ஒரு நிமிடத்திற்கு, 20 சுவாசங்கள்... இதயதுடிப்பு நிமிடத்துக்கு, 75 முதல் 118 வரை... ரத்த அழுத்தம் சிஸ்டோவில், 97 - 120 டயஸ்டோலிக், 57 - 80 உடல் வெப்பநிலை, 98.6 டிகிரி பாரன்ஹீட்...''

'எவரெஸ்ட் ஏறுவோருக்கு, இதயமும், நுரையீரலும் பலமாக இருக்க வேண்டும். எடை, ஒத்து போக வேண்டும். எவரெஸ்ட் ஏறுவதற்கு முன், 12 மாதங்கள் வரை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். முதுகில், 15 கிலோ எடையை சுமந்து மலையேறும் திண்மை வேண்டும்...'

''உடற்பயிற்சி கடந்த சில ஆண்டுகளாக செய்து தான் வருகிறேன். டேக்வான்டோ, கிக் பாக்சிங், நின்ஜா கலைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன் நான்...''

'எப்படி பந்தை போட்டாலும் சிக்சர் அடிக்கிறீர்கள். ஒரு ஹெர்குலியன் பணியில் இறங்குகிறீர். முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள்...'

''நன்றி...''

'எப்போது மலையேற போகிறீர்...'

''இன்றிலிருந்து மூன்றாவது நாள்...''

'உங்களுடன் மலையேறுவதில் துணை சேரப் போவது யாரார்...'

''தயவு செய்து சற்று பொறுங்கள். மிகப்பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன...''

மீடியா கூட்டம் முடிந்து ஒரு தேநீர் விடுதிக்குள் பிரவேசித்தாள் மிஷ்கா.

''டெஷி தெலக்...''

யாரும் பதில் வணக்கம் சொல்லவில்லை.

இறுக்கமான மவுனம் சூழ்ந்திருந்தது.

''என் அப்பா துருவ்வை பற்றி, உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் காணாமல் போய், ஐந்து நாட்கள் ஆகின்றன. அவரை மீட்க போகிறேன். எனக்கு துணையாக வர விருப்பம் உள்ளோர் கை உயர்த்தலாம்...''

யாரும் கை துாக்கவில்லை.

''நேபாளியர் யாரும் என் துணைக்கு வந்தால் அவர்கள் கேட்கும் நேப்பாளி ருப்பீஸ் கொடுப்பேன்...

''திபெத்தியர் என் துணைக்கு வந்தால் அவர்கள் கேட்கும் சைனீஸ் யுவான் தருவேன்...''

யாரும் பதில் பேசவில்லை.

ஒரு திபெத்தியர் முன் வந்து, ''சிறுமியே... உன் பணத் திமிரை காட்ட வந்தாயா... உன்னுடன் சேர்ந்து சாக நாங்கள் தயாரில்லை...'' என்றார்.

''சோமோலுங்மா உலகின் தாய் கடவுள். அவர் இரக்கமில்லாமல் நம்மை கொல்வாரா...''

''எங்கள் தெய்வத்தை பற்றி உனக்கென்ன தெரியும்...''

''அவர் உங்களுக்கு மட்டும் கடவுள் அல்ல... எனக்கும் தான்...'' என்றாள் மிஷ்கா.

''வெட்டியாக பேசாதே... வந்த விமானத்தில் திரும்பி போ...''

''என் தந்தையை காணாமல் ஊர் திரும்ப மாட்டேன்...''

''உன் அசட்டு துணிச்சலுக்கு துணை எதற்கு... நீயே தனியாக மலையேறி உன் தந்தையை கண்டுபிடித்துக் கொள்...''

''இது தான் உங்கள் இறுதி பதிலா...''

''ஆம்... இதில் எந்த மாற்றமும் இல்லை...''

''உலகமே எனக்கு எதிராக திரும்பினாலும், இறைவன் என்னுடன் இருந்தால் போதுமே...'' என்றாள் மிஷ்கா.

''தொடர்ந்து பேசாதே... போ வெளியே...''

''முடியாது...''

அப்போது தான் அது நடந்தது.

ஐஸ்கட்டிகள் கலந்த குளிர்ந்த நீரை, ஒரு வாளியில் எடுத்து வந்து, அப்படியே மிஷ்காவின் உச்சந்தையில் கவிழ்த்தனர்!

- தொடரும்...

- மீயாழ் சிற்பிகா







      Dinamalar
      Follow us