PUBLISHED ON : மார் 21, 2026

'பட்டாசித்ரா' என்பது, ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய ஓவிய கலை வடிவம். இந்த ஓவியங்கள், இந்தியாவின் வளமான கலாசாரம், புராணங்கள் மற்றும் அதன் கதைகளை பிரதிபலிக்கின்றன.
தொடக்கத்தில், இந்த வகை ஓவியங்கள் பனை ஓலை மற்றும் டாசர் பட்டு போன்றவற்றில் வரையப்பட்டன. பின், துணியில் வரையப்படுகின்றன. இந்து புராணங்கள், குறிப்பாக ஜெகன்னாதர் மற்றும் வைணவ சம்பிரதாயக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை, இந்த ஓவியங்கள்.
ஓவியங்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் அனைத்தும், இயற்கையானவை. தாவரங்கள் மற்றும் பிற இயற்கை பொருட்களிலிருந்து, இந்த வண்ணங்கள் பெறப்படுகின்றன.
பட்டாசித்ரா ஓவியம், 5ம் நுாற்றாண்டிலேயே தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்த கலை, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருகிறது. ஒடிசாவின், புரி நகரில் உள்ள ஜெகன்நாதர் கோவில் வழிபாட்டுடன், பட்டாசித்ரா ஓவியங்கள் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த பாணியில், கோவில்கள் மற்றும் பிற தெய்வ உருவங்கள் வரையப்படுகின்றன.
ஒடிசா பாணியில் இருந்து வேறுபட்டு, மேற்குவங்க பாணியிலும் பட்டாசித்ரா ஓவியங்கள் வரையப்படுகின்றன. இவை, சமூக மற்றும் நாட்டுப்புற கருப்பொருள் மற்றும் அரசியல் கதைகளை மையமாக கொண்டு வரையப்படுகின்றன.
- மு.நாகூர், ராமநாதபுரம்.
