
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
நேந்திரம் பழம் - 3
மைதா மாவு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
அரிசி மாவு - 0.25 கப்
மஞ்சள் துாள், சமையல் சோடா, ஏலக்காய் துாள் -
சிறிதளவு
தேங்காய் எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
நேந்திரம்பழத்தைத் தோல் நீக்கி, நீளவாக்கில் நறுக்கவும். மைதா மாவு, அரிசி மாவு, சர்க்கரை, மஞ்சள் துாள், ஏலக்காய்த் துாள், உப்பு, சமையல் சோடா மற்றும் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், பழத்துண்டுகளை மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.
சுவைமிக்க, 'பழம் பொரி!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- எம்.ஜெயலட்சுமி, சென்னை.

